Skip to main content

Posts

Showing posts from January, 2026

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


புலிப்பால் குடித்து வளரும் ஆண்கள்

தமிழ் சினிமாவில் வில்லன்கள் வீர வசனம் பேசும் போது தான் புலிப்பால் குடித்து வளர்ந்ததாக கூறி, மார்தட்டிக் கொள்வது உண்டு. அது மாத்திரம் அல்ல, கிராமப்புறங்களில் சிலர் இன்றும் கூட தாம் புலிப்பால் குடித்து வளர்ந்ததாக பெருமைப்படுவது உண்டு. உண்மையில் மனிதர்களால் புலியின் பாலை அருந்த முடியுமா? சிலர் அதனை இயற்கையான ஒரு நிகழ்வு அல்ல, அது தைரியம், வலிமை, வீரம் போன்ற பண்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உருவகம் எனவும் நம்புகின்றனர். அதாவது புலியைப் போன்ற வலிமையுடன் வளரும் ஆண்கள் என்று பொருள், ஏனெனில் புலிகள் வலிமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. உண்மையில் புலி போன்ற வன விலங்குகளின் பாலை மனிதர்கள் குடிக்கக் கூடியதாக இருந்தாலும், அதில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணங்கிகள், வைரஸ்கள் இருக்கலாம். அது மாத்திரமல்லாது, புலிகள் மாமிச உண்ணிகள் என்பதால் அவற்றின் பாலில், புரதச் சத்து பசுப்பாலை விட அதிகமாக இருப்பினும், அதிகம் அமிலத்தன்மை மிக்கதாக இருக்கலாம். புலியின் பாலில் இருந்து நெய் தயாரித்து அதனை உராய்வு நீக்கி திரவமாக(Lubricant) பயன்படுத்தியதற்கான குறிப்புகள் பண்டைய இந்திய நாகரிகங...