ஆண்கள் வயதுக்கு வந்த பின்னர், அவர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு தகுதியடைந்ததை உறுதி செய்யும் விதமாக அவர்களின் ஆண்குறி முதிர்ச்சியடைந்திருக்கும். அதாவது அவர்களின் ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு ஆண்குறியின் முன்தோல் முன்னும் பின்னுமாக நகர்த்தக் கூடியதாக இருப்பதனால் சில வேளைகளில் எக்குத்தப்பாக முன்தோல்(Foreskin) உள்பக்கமாக உருண்டு அல்லது சிறைப்பட்டு போயிருக்கலாம், அல்லது முன் தோலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனை அவதானிக்காது சிறுநீர் கழிக்கும் போதே ஆண்களுக்கு சிறுநீர் சிதறும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
Read More: வயதுக்கு வந்த ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஏன் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க வேண்டும்?
ஆண்குறியின் மொட்டில் உள்ள சிறுநீர் துவாரம் ஒடுங்குவது(Meatal Stenosis), Prostate பெரிதாகுதல், Abnormalities of the foreskin, such as phimosis, Genital warts போன்ற பால்வினை நோய் தொற்று, சிறுநீர்பை(Bladder) முழுமையாக நிரம்பி இருத்தல், நீரிழப்பு காரணமாக கூட Urine spraying or a Split Urine Stream உருவாகலாம். அநேகமானவை தற்காலிகமானதாகவே இருக்கும்.
சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுப்பதன் மூலம் அந்தரங்கப் பகுதியை சுத்தமாக வைத்திருக்கலாம். Smegma போன்ற தோல் அழுக்குகள் ஆண்குறியின் மொட்டில் படிவதையும் தவிர்க்கலாம்.
Read More: ஆண்கள் குளிக்கும் போது ஏன் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்திருக்க வேண்டும்?
Comments
Post a Comment