Skip to main content

Posts

Showing posts with the label Araijan Kodi

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வெள்ளி அருணா கயிறு அணியும் ஆண்கள் கவனத்திற்கு

அருணாக்கொடி, அரணா கயிறு, அரைஞாண் கயிறு என ஆண்களின் இடுப்பில் அணியும் கறுப்பு நிற கயிற்றை பல்வேறு வட்டார வழக்குகளில் அழைப்பர். இதனை கயிற்றில் மாத்திரம் அல்ல, வெள்ளியிலும் செய்து அணியலாம். நீங்கள் அருணாக்கயிற்றை கயிற்றில் அணிந்தாலும், அல்லது வெள்ளியில் செய்து அணிந்தாலும் அதனை தளர்வாக அணியக் கூடாது. உடலுடன் ஒட்டியவாறு இருக்கும் வகையில் அவற்றை அணிய வேண்டும். கருப்பு கயிற்றை இடுப்பில் கட்டுவதாக இருந்தால் அதன் நீளத்தை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைக்கலாம். ஆனால் வெள்ளியில் செய்த அருணாக்கொடியை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைத்து அதன் எஸ்-வடிவ கொக்கியை(S-Hook Clasp) கொளுவ முடியாது.  பசங்க வளரும் போது அவர்களின் இடுப்பளவு மாறும் என்பதால் சிறு வயதில் இருந்தே சிலர் கயிற்றின் உதவியுடன் வெள்ளி அருணாக்கொடியை அணிவிக்கிறார்கள்.

ஆண்கள் ஏன் வெள்ளி ஆபரணங்களை அதிகம் அணிய வேண்டும்?

நடிகர் விஜய் வெள்ளியில்(சில்வர்) கடா போட்டிருப்பார். அதே போல நடிகர் தனுஷ் வெள்ளியில் செய்த கருங்காலி மாலை போட்டிருப்பார். இவர்கள் நினைத்தால் இவற்றில் தங்கத்தில் செய்து போட்டிருக்கலாம். ஆனால் போடவில்லை. ஏன்? ஆண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணிவதன் பின்னால் இரு முக்கியமான காரணங்கள் உள்ளன. Steel, Gold, Silver, Copper, Platinum போன்ற உலோகங்களிலேயே சிறந்த ஆற்றல் கடத்தி(Best Energy Conducting Metal) வெள்ளியாகும். அது உங்கள் உடலின் வெப்பனிலையை சம நிலைப்படுத்தி உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். அடுத்த காரணம், ஏனைய உலோகங்களை விட வெள்ளியானது ஜோதிட ரீதியாக சந்திரனுடன் தொடர்புடையமை ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் மனோகாரகன் ஆவார். மனிதர்களின் மனநிலை, உணர்வுகள், கற்பனைத்திறன், மற்றும் புத்தி ஆகியவற்றை ஆளுமை செய்பவர் சந்திரன் ஆவார். Camera, Light, Travel, Security என பிரபல்யமானவர்களுக்கு ஏற்கனவே பல மன ரீதியான அழுத்தங்கள்(Stresss) இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி சிறப்பாக தோன்ற இந்த வெள்ளி ஆபரணங்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் அதிகம் மன அழுத்தத்தை சந்தித்து வந்த...

அரைஞாண் கயிற்றை வைத்து லுங்கி, வேட்டியின் கட்டை இறுக்கலாம்

ஆண்கள் லுங்கி, சாரம், வேட்டி போன்றவற்றை பல முறைகளில் கட்டலாம். ஆனால் எல்லா கட்டுகளும் ஆண்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உறுதியாக இருக்காது. சில கட்டுக்களை வேட்டியை இழுத்தாலே அவிழ்ந்து விடும். இடுப்பில் இருக்கும் வேட்டி, லுங்கி, சாரத்தின் கட்டின் உறுதி தொடர்பில் சந்தேகம் கொள்ளும் ஆண்கள், அவற்றின் கட்டின் உறுதியை உறுதி செய்யும் வகையில் அவற்றின் மீது Belt அணிவர், அல்லது இடுப்பு பகுதியில் வேட்டி/லுங்கியை கீழ் நோக்கி உருட்டி, Long Sleeve Shirts களின் கைகளை மடித்து விடுவது போல மடிப்பை உருவாகுவர். அதே போல உங்கள் இடுப்பில் அருணாக்கொடி/அரைஞாண் கயிறு இருந்தால் அதனை லுங்கி, வேட்டி, சாரத்தின் கட்டின் மீது விட்டு அவற்றின் கட்டினை உறுதியாக்கலாம். 

ஜட்டி போடும் ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டலாமா?

ஆண்கள் விவசாயம் செய்யும் போது சேற்றில் இறங்கி வேலை செய்யும் போது அணிந்திருக்கும் ஆடைகளில் சேறு படுவதை தவிர்க்க, கோவணம் கட்டிக் கொண்டு முன்னர் விவசாயம் செய்தனர். கோவணம் கட்டுவதற்கு உதவியாக ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிற்றை அணிந்திருந்தனர். அரைஞாண் கயிறு என்பது நமது கலாச்சாரத்துடன் ஒன்றிய ஆண்களுக்கான அணிகலனாகவே பார்க்கப்படுகிறது.  ஆனால் அதனை பெண்களும் அணியலாம். அன்று ஜட்டிகள் இல்லை அதனால் கோவணம் கட்டுவதற்கு வசதியாக ஆண்கள் அரைஞாண் கயிற்றை இடுப்பில் அணிந்திருந்தனர். ஆனால் இன்று ஆண்களுக்கான உள்ளாடையாக ஜட்டிகள் உள்ளன. அவ்வாறான நிலையில் ஆண்கள் இன்றும் அரைஞாண் கயிறு அணிய வேண்டுமா? நிச்சயமாக அணிய வேண்டும்.