ஆண்களால் சுய இன்பம் செய்யாமல் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? குறைந்தது 15 நாட்கள் தாக்குப் பிடிப்பதே அதிசயமாகும். ஏன் என்றால் ஆண்களின் விதைகளில் ஓரளவுக்கு தான் ஏற்கனவே உற்பத்தி செய்த விந்துக்களை சேகரித்து வைக்க முடியும். நிறைகுடம் நிரம்பினால் தழும்பத்தானே செய்யும்? ஆகவே சுய இன்பம் செய்யும் பழக்கம் அற்ற, அல்லது குறைந்தது மாதம் இரு முறை கூட(15 நாட்களுக்கு ஒரு முறை) சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறும்.
புதிதாக உற்பத்தி செய்யும் விந்துக்களை சேகரிக்க இடம் இல்லாத போது உடலால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்துக்கள் விதைப்பையை விட்டு வெளியேற்றப்பட்டு, அகத்துறிஞ்சப்படும். அதனை செயற்கையாக வெளியேற்ற உடல் பயன்படுத்தும் பொறிமுறையே ஈரக்கனவுகள்(Wet Dreams) ஆகும். வயசுப்பசங்களுக்கு பாலுணர்வுகளை தூண்டும் வகையில் கனவுகள் ஏற்படுவது இதனால் தான்.
உடலானது இயற்கையாகவே தூங்கும் போது காம கனவுகள் மூலம் காம உணர்வுகளை தூண்டும். அதே நேரம் ஆண்கள் தூங்கும் போது அவர்களின் உடலில் டெஸ்டெஸ்தரோன் ஹோர்மோனின் சுரப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக மூளை, ஆண்குறியை விறைப்படையச் செய்து(ஆண்களுக்கு அதிகாலையில் எழுந்தமானதாக ஆண்குறி விறைப்படைவது அதனால் தான்), ஆண்களுக்கு உருவாகும் செக்ஸ் சார்ந்த கனவுகள், நினைக்கு வரும் காம அனுபவங்கள் தொடர்பாக தொழிற்படும் போது ஏற்படும் தூண்டலுக்கான துலங்களாக, உடலால் அகத்திறுஞ்சப்பட வேண்டிய ஏற்கனவே உற்பத்தியாகி சேமிக்கப்பட்டிருந்த விந்துக்கள் விதைப்பையை விட்டு வெளியேறி, எதேர்ச்சையாக ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறி அவர்களின் இரவை ஈரமாக்கலாம்.
காலையில் எழும்பிப் பார்த்தால், அல்லது விந்து வெளியேறும் போது விழிப்பு வந்து எழும்பிப் பார்த்தால் அணிந்திருக்கும் ஆடை விந்தில் நனைந்திருக்கும். அதனை யாருக்கும் தெரியாமல் ம்றைத்துக் கொண்டு பாத்ரூம் போய், காலையில் தலையில் குளித்து உடலை சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் அதிக சிரத்தை எடுத்து விந்துக் கறை படிந்த ஆடைகளை கழுவிப் போட வேண்டும். விந்தானது மெத்தையில், போர்வையில் படிந்திருந்தால் அவற்றையும் அலசிப் போட வேண்டும். இவ்வாறு கஷ்டப்படுவதை விட 15 நாட்களுக்கு ஒரு முறை சுய இன்பம் செய்வது மேல் இல்லையா?
உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது போல கனவுகள் ஏற்பட்டும் விந்து வெளியேறும். காலையில் எழுந்து பார்ந்தால் ஆடையில் விந்துக் கறை படிந்த இடம் காய்ந்து போயிருக்கும்.
குறிப்பு: சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு, விந்தை அடக்கி வைக்க முயற்சிக்கும் ஆண்களுக்கு மாதம் இரு முறை அல்லது இருந்துட்டு எப்போதாவது ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளமாகும். ஆனால் அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறினால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெறவும்.
Comments
Post a Comment