"தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ!" என்ற பாடல் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அந்தப் பாடலில் "வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட.. மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட.." என்ற ஒரு பாடல் வரி வரும். அதனை மேலோட்டமாக பார்த்தால் தவறாக தெரியாது. ஆனால், அதனை இரட்டை அர்த்தத்தில் பார்த்தால், ஆண்கள் வயதுக்கு வந்ததன் முக்கியமான அறிகுறியை அல்லது அடையாளத்தை கூறியிருப்பதாக புலப்படும்.
ஆண்கள் பூப்படையும் போது அவர்களுக்கு மீசை முளைப்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் தான்.
ஆனால் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே நடக்கும் மாற்றங்கள் தொடர்பில் பெரிதாக யாரும் பேசுவதைல்லை. அப்படி ஒரு மாற்றத்தை தான் இந்தப் பாடலில் சூசகமாக கூறியுள்ளனரா?
ஒரு ஆண் வயதுக்கு வரும் போது, ஆண்குறி வளர்ச்சியடைந்து பெரிதாக மாறும். அதே நேரம் அவனது ஆண்குறியின் முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுக்கக் கூடிய இயலுமை ஏற்படும். அதாவது மீசை முளைத்த பின்னர் ஆண்களால் ஆண்குறியின் மொட்டை முன்னுக்கு எடுக்க முடியும்.
சில ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோல், ஆண்குறியின் மொட்டை மூட போதாமல் போகலாம். அதன் காரணமாக ஆண்குறியின் மொட்டு முன்னுக்கு வந்து வெளியேவே தங்கி விடும்.
இவ்வாறான ஆண்கள் பூப்படைவது தொடர்பான பல விடையங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment