ஆண்களின் மார்புகள், மார்புக் காம்புகளின் வகைகள் தொடர்பில் நாம் முந்தைய பதிவுகளில் வெகுவாக ஆராய்ந்துள்ளோம். என்ன தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மார்பில் காம்புகள் இருந்தாலும், குழந்தை பெற்ற பின்னர் பெண்களுக்கு மார்புக் காம்புகளில் பால் சுரப்பது போல, ஆண்களுக்கும் சுரக்காது. ஆனால் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மார்புக் காம்புகளில் உணர்ச்சி நரம்புகள் உள்ளன.
உடலில் காம உணர்ச்சிகள் மேலோங்கும் போது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மார்புக் காம்புகள் தடித்து கூர்மையடையும். உடலுறவில் முன் விளையாட்டுக்களில்(Foreplay) ஈடுபடும் போது, பெண்களின் முலைகளுக்கு இணையாக ஆண்களின் மார்புக் காம்புகளுடனும் முன் விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.
ஆனால் அநேகமான ஆண்கள் தமது மார்புக் காம்புகளை நக்கி, கசக்கி, நிமிட்டி தமது துணை விளையாடுவதை பெரிதும் விரும்புவதில்லை.
அதற்குக் காரணம், முலைகளை அமுக்கி விளையாடினால், அவை பெருத்து விடும் என்ற தவறான நம்பிக்கையே ஆகும். ஆனால் ஆண்களுக்கு கூட சில மருத்துவ பிரச்சனைகளால்(Gynecomastia) பெண்கள் போல ஆண்களின் மார்புகளும் முலைகள் போல தொங்குவது உண்டு.
பால்வட்டம் என்பது மார்பகத்தின் முலைக்காம்பைச் சுற்றியுள்ள, கருமையான நிறம் கொண்ட ஒரு வட்டமான பகுதி ஆகும். இதை ஆங்கிலத்தில் "Areola" என்பார்கள்
மார்புக் காம்புகளைப் போல மார்புக் காம்புகளைச் சுற்றி உள்ள பால் வட்டம் எனப்படும் முலைக்காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அளவில் இருக்கும்.
சிலருக்கு அவை மிகவும் சிறிதாக இருப்பதால், அந்த ஆண்களுக்கு முலைக்காம்புகள் இருந்தாலும் பால் வட்டம் இருப்பது வெளித்தெரிவதில்லை. உடல் நிறை அதிகரிக்கும் போது இந்த பால் வட்டத்தின் அளவு கூடிக் குறையலாம்.
Read More: ஆண்களின் மார்புக் காம்புகளின் வகைகள்
Keywords: பால்வட்டம்












Comments
Post a Comment