ஆண்கள் வேட்டியையும், லுங்கியையும், சாரத்தையும் பல வகையில் அணியலாம். ஆனால் வேட்டியயையும் லுங்கியையும் இடுப்பில் சொருகி அணிவதை விட கட்டி அணிவது பாதுகாப்பானது. வேட்டியை இடுப்பில் கட்டி முடிச்சுப் போட்டு அணியும் போது யாராவது விளையாட்டாக வேட்டியை இழுத்தாலும் அவிழாது.
அதுவே நீங்கள் வேட்டியையும், லுங்கியையும் இடுப்பில் சொருகி அணிந்தால், வேட்டியை யாராவது விளையாட்டாக இழுத்தால் அவிழ்ந்து விடும்.
சிலர் வேட்டி, லுங்கியை இடுப்பில் கட்டியோ, சொருகியோ அணிவதற்கு பதிலாக Belt, Rope பயன்படுத்தி, அவற்றை இடுப்புடன் கட்டி விடுகிறார்கள். Belt அணிவதைக் கூடஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கயிறு பயன்படுத்தி கட்டுவதை என்னவென்று சொல்வது? நம் இடுப்பில் இருந்த அருணாக்கொடியை நவநாகரீகம் என்ற போர்வையில் கழட்டியதன் தாக்கம் இப்போது புரிகிறதா?
இடுப்பில் அரணாக்கொடி இருந்திருந்தால், அதனை வேட்டியின் கட்டின் மேல் விட்டு அதன் கட்டை இறுக்கியிருக்கலாம் இல்லையா? தனியாக கயிறு கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
அநேகமான ஆண்கள் வேட்டியையும் லுங்கியையும் இந்தக் காலத்தில் சொருகி அணிவது குறைவாகும். தற்காலத்தில் வேட்டியை இடுப்பில் கட்டி அணியாதவர்கள், வேட்டியை இடுப்பில் சொருகி, கீழ் நோக்கி உருட்டி மடித்து விடுகிறார்கள். அது வேட்டியை இடுப்பில் கட்டியது போன்று, இலகுவில் அவிழாதது போன்று இருக்கும்.
வேட்டி, லுங்கி அணிவதில் கைதேர்ந்த ஆண்கள் எட்டு முழ வேட்டி அணியும் போது வேட்டியில் கட்டும் போட்டு, வேட்டியை சொருகியும், தேவைப்பட்டால் இடுப்புப் பகுதியில் உருட்டி மடித்தும் அவற்றின் கட்டை மேலும் உறுதியாக்கி அணிகிறார்கள்.



























Comments
Post a Comment