ஆண்கள் ஒவ்வொரு தேவைகள், சந்தர்ப்பங்களின் போது அணியும் தைத்த கீழாடைகள் பல உள்ளன. ஷார்ட்ஸ்(Shorts), ஜீன்ஸ்(Jeans), பேண்ட்(Dress Pants), ஃபார்மல் பேண்ட்(Formal Trousers), சின்னோஸ்(Chinos), ஜோக்கர்ஸ்(Joggers), கார்கோ பேண்ட்(Cargo), நைட் பேண்ட்(Night Pants), பைஜாமா(Pajama Pants), Track Pants, Sweatpants, Sports Tights, Compression Shorts, Long John/Thermal Wear என்பன அவற்றில் சிலவாகும்.
Formal Pants/Dress Pant அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றவை . இவை பெரும்பாலும் கம்பளி, பருத்தி அல்லது பாலியஸ்டர் துணிகளால் செய்யப்படுகின்றன.
Chinos அலுவலகம் மற்றும் சாதாரணமான நிகழ்ச்சிகள்(Smart Casual) இரண்டிற்கும் ஏற்றவை. இவை மென்மையான பருத்தி துணியால் ஆனவை. Denim Jeans அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் உகந்த, கடினமான மற்றும் நீடித்து உழைக்கும் பேண்டுகள். இது அடிக்கடி துவைத்து அணியும் கீழாடை இல்லை.
Track Pants, Joggers/Sweatpants மற்றும் Cargo Pants பயணங்கள் மற்றும் ஓய்வு நேரங்களுக்கு ஏற்ற வசதியான தளர்வான பேண்டுகள். Track Pants, Sports Pant, Joggers/Sweatpants, Sports Tights, Compression Shorts போன்றன விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்வதற்கான கீழாடைகள் ஆகும். Long John என்பது குளிர்காலத்திற்கான நீளமான உள்ளாடையாகும்(ஜட்டி). நைட் பேண்ட், பைஜாமா போன்றன இரவு நேர ஆடையாகும்.
ஜட்டிகள் போலவே ஆண்களின் ஜீன்ஸ், பேண்டிற்கும் Rise உள்ளது. நடுத்தர(Mid Rise) அல்லது உயர் இடுப்பு(High Rise) பேண்டுகள் உங்கள் தொப்புளுக்கு சற்று கீழே அல்லது நேராக இடுப்பு பகுதியில் இருக்க வேண்டும். இடுப்புக்குக் கீழே அணியப்படும் பேண்டுகள்(Low Rise) இடையில் இருக்க வேண்டும்.
பேண்டின் தொடை பகுதியில் சுமார் 1 இன்ச் அளவுக்கு துணியை லேசாகப் பிடிக்கும் அளவுக்கு தளர்வு இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமான(Skinny) பேண்டுகள் கால்களுக்குச் சிரமத்தைத் தரும். ஆனால் Stretchy Jeans வகை ஜீன்ஸ்கள், மற்றும் Lycra Pants என்னதான் உடலுடன் ஒட்டியது போன்று இருந்தாலும் அவற்றின் துணிகள் மீள்தன்மை கொண்டதாக, ஈய்ந்து கொடுக்கும் வகையில் இருக்கும்.
பேண்டின் கீழ் பகுதி காலணிகளில் எப்படி முடிகிறது என்பதை Trouser Break என்கிறோம். No Break(நோ பிரேக்) இல் பேண்ட் காலுக்கு கீழே மடிப்பு எதுவும் இல்லாமல், ஷூவின் மேற்பகுதியை லேசாகத் தொட்டபடி நிற்கும். இது மிகவும் மாடர்னான, நேர்த்தியான தோற்றத்தைத் தரும். ஸ்லிம்-ஃபிட் பேண்டுகளுக்கு இது பொருந்தும்.
Half Break(ஆஃப் பிரேக் / Medium Break) இல் ஷூவின் மேல் பேண்ட் லேசாக பட்டு, ஒரு சிறிய மடிப்பு மட்டும் உருவாகும். இது மிகவும் பாதுகாப்பான மற்றும் பாரம்பரியமான முறையாகும்.
Full Break(ஃபுல் பிரேக்) இல் பேண்ட் லென்த் அதிகமாக இருந்து, ஷூவின் மேல் பல மடிப்புகள்(Creases) விழும் . இது அகலமான பேண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் பழமையான முறையாகும்.
Dress Pants களில் Pleated, Flat Front என இரு வகைகள் உள்ளன. என்னதான் இந்தக் காலத்தின் இளைஞர்கள் Flat Front பேண்ட்களை அதிகம் விரும்பினால், அதனை அயன் செய்து அணியும் போது மடித்து Pleat வைத்தே அயன் செய்கிறார்கள். அதன் காரணமாக Flat Front பேண்ட்களிலும் Crease/Pleat உருவாகிறது.
ஆண்கள் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் போன்றவற்றை அணிய பல முறைகள் உள்ளன. பொதுவாக ஜீன்ஸ்களில் Zipper, Buttons and Buttonhole கொடுக்கப்பட்டிருக்கும்.
கயிற்றின் உதவியுடன் அணியும் டெனிம் ஜீன்ஸ்
சில ஜீன்ஸ்களில் Eyes Press Studs, Drawstrings, Elastic Waistbands போன்றவையும் Jeans Closure Method ஆக பயன்படுத்தப்படுவது உண்டு.
சில ஜீன்ஸ்களில் ஜிப்பு வைப்பதற்கு பதிலாக எல்லாவற்றிற்குமே இராட்சத பொத்தான்கள்(Giant Buttons or Studs) கொடுக்கப்பட்டிருப்பது உண்டு.
பொதுவாக Dress Pants/Formal Pants களில் Buttons and Buttonhole, Hook and Bar, Zippers போன்றன அவற்றை அணிவதற்காக(Pants Closure Method) பொருத்தப்பட்டிருப்பது உண்டு. சில பேண்ட்களில் ஒரு முறை தனியாகவும், அல்லது பல முறைகள் இணைந்தும் உருவாக்கப்படுவது உண்டு.
அதே போன்று Gurkha Pants களில் Zip, Two Side Hooks உடன் Buckle Fastenings முறையில் அதனை அணிவதற்கான முறையாக கொடுக்கப்பட்டிருப்பதுண்டு.
ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் போல சில பேண்ட்களில் Velcro பட்டிகளும் பயன்படுத்தப்படுவது உண்டு. ஆனால் அது மிகவும் அரிதாகும்.
Track Pants, Track Shorts, Shorts, Sweatpants/Joggers களில் இடுப்பு பகுதியில சுருக்கு வைத்து தைத்தது போல இலாஸ்டிக் வைத்து தைக்கப்பட்டிருக்கும் அல்லது கட்டி அணிய கயிறு கொடுக்கப்பட்டிருப்பது உண்டு.
Sports Tights, Compression Shorts, Long John போன்றவற்றில் ஜட்டிகள் போல Waistband தனியாக இணைக்கப்பட்டிருக்கும்.
Keywords: Pants fasteners Buttons, Hook and Bar, Zippers Eyes Press Studs, Drawstrings, Elastic Waistbands, Zip fly, Button fly





















Comments
Post a Comment