சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 2026 ஜூலை மாத இறுதியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்களுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவில் மொத்தம் 633 பேருக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கலந்து கொண்டிருந்த போது தமிழக முதல்வரும், முன்னாள் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகருமான சி.ஜோசப் விஜய் அவர்கள் அணிந்திருந்த ஆடை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. என்னது முதலமைச்சர் லுங்கியோட அரச விழாவிற்கு வந்திருக்கிறார்?
ஒரு வேளை இது அந்த நண்டு பிராண்ட் லுங்கியாக(Nandu Brand Premium Lungi) இருக்குமோ? Nandu Brand Premium Lungi யை பொது நிகழ்சிகளுக்கும் அணிய முடியும் என்னும் வகையிலேயே அவர்கள் விளம்பரங்களை உருவாக்கியிருந்தனர். அந்த வகையில் இதனை பலர் லுங்கியாகவே பார்த்தனர்.
ஆனால் விஜய் அவர்கள் அணிந்திருந்தது லுங்கி இல்லை, அதுவும் ஒரு புது மொடல் வேட்டி என்பது அது தொடர்பில் தேடிப்பார்த்தால் தான் தெரியும்.
ஆமாங்க, பொலிஸ் அதிகாரிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதலவர் அணிந்திருந்தது ஒரு வகை கட்டம் போட்ட டிஷ்யூ வேட்டியாகும்.
டிஷ்யூ பட்டு வேட்டி(Tissue Silk Dhoti) என்பது மிக மெல்லிய பட்டு நூல்களும், ஜரிகை நூல்களும் சேர்த்து நெய்யப்பட்ட ஒரு பாரம்பரிய ஆடம்பரமான ஆடையாகும். இது திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பான விசேஷ காலங்களில் ஆண்கள் உடுத்தும் நவீன மற்றும் பாரம்பரியமிக்க வேட்டியாகும்.
இது டிஷ்யூ பேப்பர் போல மிக மெல்லியதாகவும், அதே சமயம் பட்டு மற்றும் ஜரிகை இழைகள்(Zari) கொண்டு நெய்யப்பட்டிருப்பதால் பளபளப்பான தோற்றத்தைத் தரும். சாதாரண வெள்ளை வேஷ்டிகளைப் போலன்றி, இதன் கரைகளில் தங்கம், செம்பு, அல்லது வெள்ளி நிறத்திலான அடர்ந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். அடர்த்தியான பட்டு வேஷ்டிகளை விட இது மிக மெல்லியது மற்றும் எடைக் குறைவானது.
இதை இயந்திரங்களில் துவைக்கக் கூடாது(No Machine Wash). மென்மையான கைகளால் மட்டுமே துவைக்க வேண்டும் அல்லது டிரை கிளீனிங்(Dry cleaning) செய்ய வேண்டும்.வெயிலில் நேரடியாக உலர வைக்காமல் நிழலில் உலர்த்துவது நல்லது.
Keywords: தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அதிகமான அணியும் டிஷ்யூ வேட்டிகள், முதலமைச்சர் ஜோசப் விஜய், CM Vijay










Comments
Post a Comment