ஆண்கள் Boxer Briefs ஜட்டிகளை தெரிவு செய்து அணியும் போது அவற்றின் கால்கள் தேவைக்கு அதிகமாக நீளமாக இருந்தால், அதனால் பல அசெளகரியங்களை சந்திக்க வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்படலாம்.
அன்றாட வாழ்க்கையில் ஆண்கள் தெரிவு செய்து அணியும் Boxer Briefs ஜட்டிகளின் கால்கள் நீளமாக இருந்தால் அவை உருண்டு(Roll) கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அவ்வாறு உருளும் போது ஜட்டியின் துணி/இலாஸ்டிக்குளகுக்குள் தொடைகளில் உள்ள முடிகள் சிக்குப்படலாம். அதனால் அதிக வலியை உணர நேரிடலாம்.
அது மாத்திரமல்ல, அதிகப்படியான நீளமாக கால்களைக் கொண்ட ஜட்டிகளை ஆண்கள் தெரிவு செய்து அணியும் போது அதன் துணி, இலாஸ்டிக்குகள் தொடைகளுடன் உராய்ந்து Chafing(தேய்த்ததால் புண்ணாகுதல், சிவத்தல், தடித்தல், எரிச்சல் ஏற்படுதல்) பிரச்சனைகள் எற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
கூச்சசுபாவம் உள்ள ஆண்களும், ஜட்டி அணிந்தது போன்று உணர விரும்பாத ஆண்களும் ஷாட்ஸ் போன்ற Boxer Briefs ஜட்டிகளை தெரிவு செய்யும் போது அவற்றின் கால்கள் தேவைக்கு அதிகமாக நீளமாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
Trunks ஜட்டி அளவுக்கு, அல்லது அதனை விட சற்று நீளமாக Boxer Briefs ஜட்டிகளின் கால்கள் நீளமாக இருந்தால் போதுமானதாக இருக்கும்.













Comments
Post a Comment