பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் தமிழ் வார்த்தை "பாடேன்" க்கும் ஆங்கில வார்த்தை "Pardon" இற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை வெளிக்காட்டும் வகையிலான ஒரு காமெடி காட்சி உருவாக்கப்பட்டிருக்கும். அது போல ஒன்று தான் இந்த பாடு!
தமிழில் "பாடு" என்றால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக: பாடுதல், பாடுபடுதல், அவஸ்தைக்கு உள்ளாகுதல், மேலும் பல. ஆனால் அதனை ஆங்கிலத்தில்(Tanglish) எழுதினால் "Paadu" என எழுதலாம். ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதும், சண்டையிடும் போதும் நம்மில் பலர் பயன்படுத்தும் "ஓத்தா.. பாடு!" என்பதற்கும் தமிழில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாடுக்கும் வித்தியாசம் உள்ளது.
அதனை ஆங்கிலத்தில்(Tanglish) எழுதினால் "Baadu" என எழுதலாம்.இது Scoundrel, Scum, Cheapo போன்ற கொச்சை வார்த்தைகளுக்கு பதிலாக பயன்படுத்தக் கூடிய கொச்சை வார்த்தையாகும்.
Scoundrel(யோக்கியதை இல்லாதவன்/அயோக்கியன்)
அயோக்கியன்(Ayokkian) - நேர்மையற்றவன்.
துரோகி(Dhroghee) - ஏமாற்றுபவர்.
காலி(Kaali) - ஒழுக்கமற்றவன்.
Scum(சமூகத்தின் கழிவு / கேடுகெட்டவன்)
கழிசடை(Kazhisadai) - தகுதியற்றவன்.
கேடுகெட்டவன்(Kedu kettavan) - மதிக்கத் தகாதவன்.
பொறுக்கி (Porukki) - ஒழுக்கமற்ற நபர்(பேச்சுவழக்கு).
Cheapo(கஞ்சன்/பிசுநாரி)
கஞ்சன்(Kanjan) - பணம் செலவழிக்காதவன்.
பிசுநாரி(Pisunaari) - மிகக் கஞ்சத்தனமானவர்.
மலிவானவன்(Malivaanavan) - தரம் தாழ்ந்த குணம் கொண்டவர்.
நாம் உணர்ச்சி வசப்பட்டு கூறும் பாடு(Baadu) என்பது உண்மையில் தமிழ் வார்த்தையே இல்லை. இது பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட Bawd எனும் ஆங்கில வார்த்தையின் மருவிய வடிவமாகும்.
Bawd என்றால் விபச்சாரம்(Brothel) நடக்கும் விடுதியின் முகாமையாளர், தலைவன்/தலைவி எனலாம்.

Comments
Post a Comment