நீங்கள் ஒரு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆணாக இருந்து, அதனை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் Straight ஆண் என கூறிக் கொண்டு, ஊரை ஏமாற்றி வந்தால், உங்களை Closet Gays or Bisexual Men என்பர்.
Closet Gay ஆண்களை அவ்வளவு எளிதாக ஏனைய தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களால் உள்ளுணர்வு வழியாக(Gay Radar), கண்களைப் பார்ப்பதன் மூலம்(Eye Contact) கண்டறிய முடிந்தாலும், ஏனையவர்களால் அவ்வளவு எளிதில் Gays என அடையாளப்படுத்த முடியாது.
ஆனால் Closet Gay ஆக இருக்கும் ஆண்களின் Facebook, Instagram, Threads, X போன்ற சமூகவலைத்தளங்களின் Timeline, Suggested Posts, Videos/Reels/Shorts போன்றவற்றை பார்த்தால் அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடும்.
நீங்கள் மூடி மறைக்க விரும்பும் விடையங்களை உங்கள் Social Media Timeline, and Suggested Posts, Videos தோலுரித்துக் காட்டும். நீங்கள் என்ன தான் என்று சொல்லி அவற்றின் Algorithm யை மாற்ற முனைந்தாலும், முழுசா நனைந்தது, முழுசா நனைந்தது தான். சமூகவலைத்தளங்களில் முக்காடை எடுத்து விடத்தான் வேண்டும்.
எப்போது சமூகவலைத்தளங்களில் நாம் எவ்வாறான பதிவுகளை, வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதை நம்முடைய முந்தைய நடவடிக்கைகளை வைத்து தீர்மானிக்க AI யை பயன்படுத்த ஆரம்பித்தார்களோ, அந்த நாள் முதலே உங்களை முழுமையாக புரிந்து கொள்ள AI கள் ஆரம்பித்து விட்டன.
நீங்கள் Gay ஆணாக இருந்தால், உங்களுக்கு அதிகம் ஆண்கள் சம்பந்தமான பதிவுகளை அதிகம் காண்பிக்கும். அதே நேரம் கவர்ச்சியான ஆண்களின் வீடியோக்கள், படங்களை அதிகம் காண்பிக்கும்.
நீங்கள் Straight ஆணாக ஆக இருந்தால், உங்களுக்கு சாதாரண பதிவுகளை அதிகம் காண்பிக்கும். அதே நேரம் கவர்ச்சியான பெண்களின் வீடியோக்கள், படங்களை அதிகம் காண்பிக்கும்.
நீங்கள் Bisexual ஆணாக இருந்தால், உங்களுக்கு ஆண்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளை அதிகம் காண்பிக்கும். அதே நேரம் கவர்ச்சியான பெண்களின், மற்றும் ஆண்களின் வீடியோக்கள், படங்களை கலவையாக சம அளவில் காண்பிக்கும்.
இது போலவே ஒரு நபரின் ஈர்ப்பு, பாலியல் தெரிவு, பாலியல் நாட்டம்/பாலீர்ப்பு(Sexual Orientation) சார்ந்து சமூகவலைத்தளங்கள் Lesbian, Transgender, Straight பெண்களுக்கும் இவ்வாறு அவர்களுக்கு ஏற்ற பதிவுகளையும், வீடியோக்களையும், படங்களையும் காண்பிக்கும்.
சமூகவலைத்தளங்களின் நோக்கம் உங்களை அவர்களுடைய Apps களில் அதிக நேரம் செலவிட வைப்பதாகும். அதற்கு உங்களுக்கு பிடித்த விடையங்களை அதிகம் பரிந்துரைப்பர். அதனை பார்த்து பார்த்து உங்களை அறியாமலேயே உங்கள் சுயத்தை அந்த Apps களிடம் வெளிப்படுத்தி விடுவீர்கள். அதனை வைத்து உங்கள் நேரத்தை அவர்கள் பயன்படுத்துவர், விளம்பரங்கள் மூலம் பணமும் சம்பாதிப்பார்கள்.
சில சமூக வலைத்தளங்கள் உங்கள் தரவுகளை இலகுவாக நீக்க/புதுப்பிக்க வழிமுறைகளை தந்தாலும் பேஸ்புக், இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்கள் அவற்றை செய்வதில்லை.
ஓரினச்சேர்க்கை/தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்கள், இன்னமும் இந்த சமூகத்தில் தம்மை Gay/Bisexual ஆண்களாக அடையாளப்படுத்தாவிட்டால், அவர்கள் Fake Accounts களை பயன்படுத்துவதே சிறந்தது.
Original Social Media Accounts, Main Accounts களை நீங்கள் அந்த மாதிரி பதிவுகள், வீடியோக்கள் பார்க்க பயன்படுத்தினால், அடிக்கடி Account யை அழிக்க வேண்டி ஏற்படும்.

Comments
Post a Comment