வயசுப்பசங்க ஜட்டி போடுவது அவசியம் தான். ஆனால் ஆண்கள் ஜட்டி போடாவிட்டால் அவர்களின் விதைப்பை நீட்சியடைந்து விதைகள் தொங்க ஆரம்பிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும்.
ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது ஆகும். சூழல் வெப்ப நிலைக்கு ஏற்ப, விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள ஆண்களின் விதைப்பை தொய்வடைந்து/நீட்சியடைந்து விதைகளை உடலை விட்டு காற்றோட்டமாக தொங்க, விலத்தி வைக்கும்.
விந்து உற்பத்தியை மேற்கொள்ள தேவையான வெப்ப நிலையை ஆண்களிடன் உடலில் இருந்து பெற்றுக் கொள்ளவே குளிர்பிரதேசங்களில் வசிக்கும் ஆண்களின் விதைப்பை சுருங்கி, இறுகிப் போய், விதைகள் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும்.
இதனால் தான் அநேகமான வெளி நாட்டு ஆபாச வீடியோக்களில் நடிக்கும் ஆண்களின் விதைப்பை, நமது நாட்டில் வசிக்கும் ஆண்களுடையது போல நீட்சியடைந்து, விதைகள் தொங்குவதில்லை.
அவர்களுக்கு இறுக்கமான ஜட்டி அணிதால் கூட பரவாயில்லை. விந்து உற்பத்தி பாதிப்படையாது. அதனால் தான் குளிர்பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் Jockstrap ஜட்டியைக் கூட அன்றாட வாழ்க்கையில் அணிகிறார்கள்.
ஆண்கள் ஜட்டி அணிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் பிரதானமானது ஆண்குறி விறைப்படைந்தால் அது நீட்டிக் கொண்டு வெளியே தெரியாமல் இருப்பதற்காக ஆகும். அதனைத் தவிர்ந்து ஆண்கள் ஜட்டி அணிவது அவர்களின் ஆண்குறியையும் விதைகளையும் ஓரிடத்தில் பொட்டலமாக்கி, ஓடி ஆடி வேலை செய்யும் போதும், விளையாடும் போதும் கால்களுக்கு நடுவே ஆடி அசெளகரியத்தை ஏற்படுத்தாது இருப்பதற்காகவும் ஆகும்.
அநேகமான ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் கொட்டைகள் கீழிறங்கும் என்று கருதுவதற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கு ஹேர்னியா(குடலிறக்கம்) நோய் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமையாகும். ஆண்கள் அடிவயிற்றுக்கு Support கொடுக்காமல் பாரம் தூக்கும் போது, பழு தூக்கும்/இழுக்கும்(Heavy Lifting) வேலைகள் செய்யும் போது குடலிறக்க நோய் ஏற்படும். கீழறங்கும் குடல் சிலருகு விதைப்பையினுள்ளும் இறங்குவது உண்டு.
Comments
Post a Comment