ஆண்களுக்கு வெள்ளை வேட்டிகளை கம்பீரமான தோற்றத்தை, மரியாதையைக் கொடுத்தாலும் அவை மழையில் நனைந்து ஈரமானாலோ, அல்லது வேட்டியுடன் குளிக்கும் போது தண்ணீரில் நனைந்து ஈரமானாலோ அது உங்கள் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தையும் உடல் அமைப்பையும் அப்பட்டமான வெளிக்காட்டி விடும்.
ஈரமான வெள்ளை வேட்டியுடன் இருக்கும் போது தமது அந்தரங்கம் வெளித்தெரிவதை தவிர்ப்பதற்கு விரும்பும் ஆண்கள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து இடுப்பில் சொருகலாம். துணி அடுக்குகள் அதிகமாகும் போது அந்தரங்கம் அப்பட்டமாக வெளித்தெரியாது.
ஆண்கள் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது தெரிவு செய்து அணியும் ஜட்டியின் நிறம், அவர்களின் வேட்டியை ஊடுருவி வெளித்தெரியாத வகையில் இருக்க வேண்டும்.
சில ஆண்கள், அதற்காக தமது தோலின் நிறத்தை ஒத்த நிறமுடைய ஜட்டிகளை தெரிவு செய்து அணிவது உண்டு.
வேட்டி அவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளே Shorts அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள் தன்னம்பிக்கை அற்ற, ஆண்மையற்ற ஆண்களாகும்.
வெள்ளை நிற பனியன் எப்படி வெள்ளை நிற சட்டையினூடாக வெளித்தெரியுமோ, அது போல தான் வெள்ளை நிற ஜட்டிகளும் வெள்ளை நிற வேட்டியை ஊடுருவி வெளித்தெரியும். அதனை தவிர்க்க சாம்பல் நிற ஜட்டி, பனியன் ஆண்களுக்கு உதவியாக இருக்கும்.
வெள்ளை நிற வேட்டிகள் அணியும் போது அவற்றின் கரையின் நிறத்தை ஒத்த நிறமுடைய அல்லது அதற்கு சமமான அல்லது அதனுடன் ஒத்துப் போகக் கூடிய நிறமுடைய சட்டையை ஆண்கள் அணிய வேண்டும்.
வெள்ளை நிற வேட்டி கட்டும் ஆண்கள் போது இடங்களில் உட்காரும் போது Kerchief அல்லது துண்டு விரித்து அதன் மேல் உட்காருவதன் மூலம் குண்டிப் பகுதியில் அழுக்கு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கறைபடித்த வெள்ளை வேட்டிகளை உடனுக்குடன் துவைத்து, அலசி காயப்போடுவது சிறந்தது. துவைத்து காயப்போட்ட வேட்டியை அப்படியே எடுத்து மடித்து வைக்காமல், அயன் செய்து மடித்து வைத்தால் கசங்காது நேர்த்தியாக இருக்கும். அவசரத்துக்கு எடுத்துக் கட்டக் கூடியதாக இருக்கும்.
Comments
Post a Comment