ஆண்கள் காலையில் எழுந்து குளித்து, பின்னர் உடலை நன்கு துடைத்து ஈரத்தை உலர்த்திய பின்னர் அணியும் ஜட்டியை இரவு தூங்கச் செல்லும் போது தான் கழட்ட வேண்டும்.
ஆண்கள் ஜட்டி அணிந்ததும் அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் வியர்வை முதற்கொண்டு அனைத்தையும் அது உறிஞ்சி வைத்து கொண்டு அந்தரங்கப் பகுதியை உலர்வாக வைத்திருக்கும்.
இவ்வாறு ஒரு முறை அணிந்த ஜட்டியை ஆண்கள் அடிக்கடி கழட்டி மாட்டக் கூடாது. அது அவர்களின் ஜட்டியின் இலாஸ்டிக்கை பழுதடையச் செய்யும். டாய்லெட்டை பயன்படுத்தும் போது இறக்கிய ஜட்டியை, அந்தரங்கப் பகுதியின் ஈரத்தை உலர்த்திய பின்னரே மீண்டும் அணிவது உகந்தது. அதன் மூலம் ஜட்டி ஈரமாவதை தவிர்க்கலாம்.
காலையில் அணிந்த ஜட்டியை இரவு கழட்டி அலசிப் போடுவதே சிறந்தது. அதே நேரம் ஏற்கனவே அணிந்த ஜட்டியை மீண்டும் அணிவது பல சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்தரங்கப் பகுதியில் துர்வாடை, அரிப்பு போன்றவற்றை உருவாக்கும்.
Comments
Post a Comment