ஆண்கள் என்ன தான் பார்த்து பார்த்து லுங்கி/வேட்டி கட்டிக் கொண்டு தூங்கினாலும், காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் இருந்த லுங்கி/வேட்டியின் கட்டு அவிழ்ந்து இருப்பது, அல்லது லுங்கி முழுமையாக அவிழ்ந்து நீங்கள் அம்மணமாக கிடப்பது, அதிகாலையில் ஆண்குறி விறைப்படைந்து லுங்கிக்குள் கூடாரம் போட்டுக் கொண்டிருப்பது போன்ற பிரச்சனைகளை அனுபவரீதியாக கடந்தே அவர்கள் லுங்கி/வேட்டி கட்டுவதில் கைதேர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
என்ன தான் YouTube Videos பார்த்து ஆண்கள் லுங்கி, வேட்டி கட்ட பழகினாலும், லுங்கி/வேட்டி கட்டுவதில் தேர்ச்சி பெற அவர்களின் அனுபவமே அவர்களுக்கு சிறந்த ஆசானாக இருக்கும்.
லுங்கி, வேட்டி இடுப்பில் நிற்குதில்லையா? தூங்கும் போது அடிக்கடி கட்டு அவிழ்கிறதா? அது இயல்பான ஒன்று தான். நீங்கள் ஜட்டி அணிந்து லுங்கி/வேட்டி கட்டிக் கொண்டு தூங்குவதன் மூலம் லுங்கியின் கட்டவிழ்ந்தாலும் உங்கள் மானம் காப்பாற்றப்படும்.
அதே நேரம் லுங்கி/வேட்டியை கட்டும் போது உங்கள் இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை அதன் கட்டின் மேல் விட்டு, கீழ் நோக்கி உருட்டி மடித்து விடுவதன் மூலம் லுங்கியின்/வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம்.
ஆண்கள் ஜட்டி அணிந்து லுங்கி கட்டிக் கொண்டு தூங்கும் போது அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியையும் இலகுவாக மறைக்கக் கூடியதாக இருக்கும்.
தனி அறை தவிர்ந்த ஏனைய இடங்களில் லுங்கி/வேட்டி கட்டிக் கொண்டு தூங்கும் போது உள்ளே Briefs ஜட்டி அணிவதன் மூலம் நீங்கள் தூங்கும் போது வேட்டி/லுங்கி விலகினாலும் உங்கள் அந்தரங்கள் அப்பட்டமாக வெளித்தெரியாது.
அதே நேரம் ஆண்குறி விறைப்படைந்தாலும் லுங்கி/வேட்டியில் கூடாரம் போடாது.
ஆண்கள் Briefs ஜட்டி அணிந்து லுங்கி/வேட்டி அணிவதன் மூலம் ஜட்டி போடாமல் லுங்கி/வேட்டி அணிந்த சுகத்தை முழுமையாக அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.
Keywords: லுங்கி இடுப்பில நிக்குதில்லையா? வேட்டி இடுப்பில் தங்குதில்லையா? இடுப்பை விட்டு கீழே இறங்குதா? லுங்கி கட்டு சீக்கிரம் அவிழ்கிறதா?













Comments
Post a Comment