காம எண்ணங்கள் ஒருவனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் வலிமையுடையவை. காமத்தை கட்டுப்படுத்த முடியாதவனால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. வழி தவறி சிக்கி சின்னாபின்னமாகி விடுவான். இது ஆண்களுக்கு மாத்திரம் அல்ல, பெண்களுக்கும் பொருந்தும்.
காம உணர்வுகளை நெறிப்படுத்த, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒவ்வொரு ஊர்களிலும், இனங்களிடையேயும் சில மூட நம்பிக்கைகள் பரவலாக இருக்கும். அதில் பாதி உண்மை பாதி பொய் கலந்திருக்கும். அவற்றை பிரித்து பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால் அவற்றால் பல ஆண்களும், பெண்களும் காமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அதை ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு(AI) அல்லது செயற்கை அறிதிறன் மூலம் துப்புத்துலக்கினால் பாதிதான் உண்மை என்பது புலப்படும். ஆனால் யாரும் அதனை செய்ய மாட்டார்கள்.
அவசரமாக சாப்பிட்டாலோ, அவதி அவதியா சாப்பிட்டாலோ அது வயிற்று புண்ணை ஏற்படுத்தும். பசி எடுத்து சாப்பிடாமலே இருந்தாலும் வயிறு புண்ணாகும். புண்ணான வயிற்றில் இருந்து வாயுக்கள்(Gas) வெளியேறி நோயை உண்டு பண்ணும்.
இதை போலதான் பாலியல் எண்ணம் வந்து அடுத்த சில மணி நேரங்களில் இணை சேரவில்லையெனில் இடுப்பு பகுதியில் சுரக்கும் நீர்கள் கெட்டு போயி வாயுவை(Gas) உண்டு செய்து நோய்களை உருவாக்கும். பாலியல் எண்ணம் வந்து அவசரமாக அல்லது அவதியாக இணை சேர்ந்தாலும் உடலுக்கு நோய் ஏற்படும்.
காம எண்ணம் வரக்கூடாது வந்தால் முறையான திருமண உறவுடன் இணை சேர்தல் அவசியம். இது தான் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான விதி. கண்மூடித்தனமாக கள்ள உறவுகளை வைத்துக் கொண்டு இச்சையைத் தணித்தால் வாழ்க்கை திசைமாறி விடும்.
திருமணம் ஆகாத இளம் ஆண்கள் குப்புற படுக்க கூடாது, திருமணம் ஆகாத பெண்கள் மல்லாக்க படுக்க கூடாது என கிராமங்களில் சொல்வார்கள். உடலில் தேவையற்ற பாலியல் நீர் சுரப்பதை தடுப்பதற்காக தான் இப்படி கூறுவார்கள்.
பொதுவாக உடலுறவு கொள்ளும் போது ஆண் மேலேயும்(குப்புறபடுத்து) பெண் கீழேயும்(மல்லாக்கப்படுத்து) இணை சேர்வர். அதன் அடிப்படையிலேயே இவ்வாறான நம்பிக்கைகள் உருவாகியுள்ளது.
திருமண உறவு இல்லாமல் இச்சை மற்றும் பாலியல் எண்ணத்திலே அதிக நேரம் செலவிடுவது என்பது உடலை உருக்கும் அல்லது பெருக்கும் ஆக மொத்தம் உடல் பலவீனமாகும். உறுப்புகள் பலவீனமடையும்.கண்பார்வை மங்கும். இடுப்பு பகுதி வலியுடனே இருக்கும். கர்ப்பப்பை மற்றும் விதைப்பையை கட்டுபடுத்துவது சிறுநீரகம். முறையற்ற கலவி அல்லது எந்நேரமும் கலவி சிந்தனை முதலில் கர்ப்பப்பையை மற்றும் விதைப்பையை பலவீனபடுத்தி, சிறுநீரகத்தை பலம் இழக்க செய்யும். உடலும் மனமும் பலத்துடன் இருப்பதற்கு காரணம் சிறுநீரகத்தின் பலமே. உங்கள் தவறான சிந்தனையால் சிறுநீரகம் பலவீனமடைகிறது.
சிறுநீரகம் மூளையோடு நரம்புகளால் நெருக்கமாக இணைந்திருக்கிறது. கலவி சிந்தனையிலே பாலியல் நீரை ஒழுக்கி கொண்டே இருந்திர்களானால் முதலில் சிறுநீரகம், பின்பு மூளை, பின்பு உடல் என வரிசையாக பலவீனமடையும்.
சினிமா சோசியல் மீடியா தொலைகாட்சி மூலம் காட்டபடும் பாலியல் காட்சி மூலம் உங்கள் சிறுநீரகத்தை பலவீனபடுத்தி உங்கள் கண்முன் நடக்கும் சிறு சிறு அநீதிகளை கூட தட்டி கேட்க துணிவில்லாத நவின மனிதர்களை உருவாக்குவது தான் பெருவணிகம், மனிதனை அடிமையாக்கும் தந்திரம். சிறுநீரகம் உடல் வலிமையோடும் மன தைரியத்தோடும் தொடர்புள்ள உறுப்பு. ஆணின் தண்டிலும் பெண்ணின் யோனியிலும் வரும் நோய்கள் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் நிச்சயம் குறைக்கும்.
Keywords: ஆண்கள் ஏன் குப்புறப்படுக்கக் கூடாது? பெண்கள் ஏன் மல்லாக்க படுக்கக் கூடாது?
Comments
Post a Comment