குளிப்பது என்பது உடலை சுத்தமாக்கும் மிகவும் முக்கியமான சுகாதாரப்பழக்கம் ஆகும். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் பலர் காக்காய் குளியல் போட்டுக் கொண்டு திரிகிறார்கள்.
"காக்காய் குளியல்" என்பது, ஒருவர் குளிக்கும்போது, தண்ணீரில் உடல் முழுவதையும் நனைத்து, பின் உடனே எழுந்து, தலையையும் உடலையும் உதறிக்கொண்டு பறப்பது போல், அல்லது அசைத்துக்கொள்வது போல், விரைவாக முடித்துக்கொள்ளும் ஒரு குளியல் முறையைக் குறிக்கிறது. இது பொதுவாக முழுமையாக குளிக்காமல், அவசரமாக செய்யப்படும் ஒரு குளியல் முறையாகும்.
ஆண்கள் நன்றாக குளிப்பதற்கு அதிக நீர் தேவை, உங்களுக்கு அது உங்கள் வீட்டில் கிடைக்காவிட்டால் கடல், குளம், ஆறு போன்ற இடங்களுக்குச் சென்றும் கூட குளிக்கலாம்.
ஆண்கள் குளிக்கும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை நனைய வேண்டும். அத்துடன் ஆண்குறியின் மொட்டு, சூத்தோட்டை கூட நனைந்து சுத்தமாக வேண்டும்.
அந்தளவுக்கு ஆண்கள் சுதந்திரமாக குளிக்க மூடிய குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஏற்ற ஆடைகள் அணிந்து சுதந்திரமாக பொது இடங்களில் குளிக்க வேண்டும்.
சுதந்திரமாக நிர்வாணமாக குளிப்பதிலும் பிரச்சனை உள்ளது. உங்கள் சுதந்திரம் இன்னொருவர் கண்களுக்கு கூசலாம் அல்லது விருந்தாகலாம். குளிக்கும் போது இயற்கை அனர்த்தங்கள்(நில நடுக்கம், சுனாமி), விபத்துக்கள்(நீரில் அடித்துச் செல்லல், மூழ்குதல்) அல்லது மருத்துவ பிரச்சனைகள் ஏற்பட்டால், உதவிக்கு வருபவர்கள் உங்களை நிர்வாணமாக காண நேரிடலாம். அதன் காரணமாகவே மூடிய குளியலறையாக இருந்தாலும் குறைந்தது துண்டு அல்லது ஜட்டியாவது அணிந்து குளிக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் சுதந்திரமாக குளிக்க எவ்வாறான ஆடைகளை அணிவது சிறந்தது?
1. உங்களால் நிர்வாணமாக குளிக்க முடியாவிட்டால், குறைந்தது ஜட்டியாவது அணிந்து குளிக்க முயற்சிக்கவும்.
2. பொது இடங்களில் இடுப்பைச் சுற்றி மெல்லிய துண்டு/Bathing Towel கட்டிக் கொண்டு இடுப்பளவுக்கு நீரில் இறங்கி குளிக்கலாம். இதற்கு வேட்டி, லுங்கி/சாரம் கூட ஆண்கள் பயன்படுத்தலாம்.
3. சிறிய, மெல்லிய, மிகவும் தளர்வான Shorts களை ஆண்கள் அணிந்து குளிக்கலாம். Swimwear/Swim Trunks/Swim Shorts இதற்கு பொருத்தமாக இருக்கும். Track Pants, Track Shorts போன்றவற்றையும் ஆண்கள் பொது இடங்களில் குளிக்க பயன்படுத்தலாம்.
எக்காரணம் கொண்டும் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குளிக்க வேண்டாம். அவ்வாறு குளிக்கும் போது உடலை முழுமையாக சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். அதே நேரம் ஈரமான உடைகளை கழட்டுவதும் கடினமாக இருக்கும்.
Comments
Post a Comment