ஆண்கள் வேட்டி, லுங்கி, சாரம் அணிந்து கொண்டு கீழே இருக்கும் போது ஆடை விலகி அந்தரங்கம் வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
ஆண்கள் நிலத்தில் பலவகையில் இருப்பர். உதாரணமாக சம்மணம் கால் போட்டு உட்காருவது/சம்மாளம் கொட்டி உட்காருவது, குந்தியிருப்பது, கால்களை அகட்டி வைத்துக் கொண்டு இருப்பது, கால்களை நீட்டி வைத்துக் கொண்டிருப்பது.
சம்மணம் அல்லது சம்மாளம் என்பது கால்களை மடித்து, உடலை ஒரு நேர்கோட்டில் வைக்கும் உட்காரும் நிலையாகும்.
ஆண்கள் வேட்டி, லுங்கி அணிந்து கொண்டு இருக்கும் போது அவர்களின் வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேலே தூக்கி தொடைகளுக்கு நடுவே விட்டுக் கொண்டு இருப்பதன் மூலம், உட்காரும் போது ஆடை விலகி அந்தரங்கம் வெளித்தெரிவது தவிர்க்கவும்.
அது மாத்திரமல்லாது, ஆண்கள் ஜட்டி அணிந்து வேட்டி, லுங்கி போன்றவற்றை அணிந்தால், அவர்கள் உட்காரும் போது ஆடை விலகினாலும், அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியானது மானத்தை காக்கும்.
Comments
Post a Comment