வயதுக்கு வந்த ஆண்கள் குளிக்கும் போது இந்த விடையத்தை மிகவும் முக்கியமாக செய்ய வேண்டும். அதன் மூலமே உடலை முழுமையாக சுத்தம் செய்ய முடியும். முஸ்லிம் ஆண்களுக்கும், ஆண்குறியில் முன் தோல் இல்லாத ஆண்களுக்கும் இந்தப் பிரச்சனை இல்லை.
ஆனால் முன் தோல் உள்ள வயசுப் பசங்க அன்றாடம் குளிக்கும் போது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும். அதன் மூலமே ஆண்குறியை(Uncut) நன்கு சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும்.
ஆண்குறியின் மொட்டை நீரினால் அலசிக் கழுவ வேண்டும். தேவைப்பட்டால் ஆண்குறியின் மொட்டில் படிந்திருக்கும் தோல் அழுக்குகளை(Smegma) கழுவி சுத்தம் செய்ய Mild Soap களை பயன்படுத்தலாம்.
ஆண்கள் குளித்த பின்னர், உடலை நன்கு துவாயால் உலர்த்தி துடைக்கும் போது, ஆண்குறியின் மொட்டில் உள்ள ஈரத்தையும் நன்கு துடைத்து உலர்த்திய பின்னரே ஆண்குறியின் மொட்டை அதன் முன் தோலால் மூட வேண்டும்.













Comments
Post a Comment