இறுக்கமான உள்ளாடைகள் அணியும் ஆண்களுக்கும், வியர்வையில் ஊறிய அழுக்கு ஜட்டிகளை மீண்டும் மீண்டும் அணிவதன் மூலமாகவும், ஏனைய ஆண்களுடன் உள்ளாடைகளை பகிர்வதன் மூலமாகவும், உணவு ஒவ்வாமைகள் காரணமாகவும், கண்மூடித்தனமான பாலியல் உறவுகளாலும் ஆண்களுக்கு அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் சரும பிரச்சனைகள் ஏற்படலாம்.
இறுக்கமான உள்ளாடைகளை அடிக்கடி அணிவதன் மூலமும், அழுக்கு ஜட்டியை, ஏற்கனவே அணிந்த வியர்வையில் ஊறிய ஜட்டியை அலசி காய வைத்து அணியாமல் திரும்ப திரும்ப அணிவதன் மூலமும், ஈரமான ஜட்டிகளை அணிவதன் மூலமும் ஆண்களின் அந்தரங்கப் பகுதியில் அரிப்பு, சருமத்திற்கும் ஜட்டியின் துணிக்கும் இடையில் உராய்வு மூலம் ஏற்படும் Chafing நிலைமை(கொப்பளங்கள் தோன்றுதல், தொடை/கவடு பகுதிகள் சிவத்து போதல், ஊசி குத்துவது போல வலி, சருமம் கருமை நிறமடைதல்) ஏற்படலாம்.
இந்த நிலைமை ஏற்பட தொடங்கிய சந்தர்ப்பத்திலேயே அவற்றை சரி செய்வதன் மூலம் அது மேலும் தீவிரமடைவதை தவிர்க்கலாம். அந்தரங்கப் பகுதியில் Chafing நிலைமை ஏற்பட்டால் ஜட்டி கூட அணிய முடியாத அளவுக்கு அசெளகரியமாக இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு Talc Powder யை அள்ளி அந்தரங்கப் பகுதியில் பூசி, அதன் பின்னர் சற்று தளர்வான வேறு ஜட்டிகளை அணியவும்.
குறிப்பு: அந்தரங்கப் பகுதியில் பவுடர் பயன்படுத்தும் ஆண்கள் அன்றன்றே அணிந்த ஜட்டிகளை அலசி காய விட வேண்டும். அதன் மூலம் ஜட்டி பழுதடைவதை, ஜட்டியின் நிறம் மங்குவதை தவிர்க்கலாம்.
ஆண்கள் தமது ஆடைகள், உள்ளாடைகளை துவைக்க பயன்படுத்தும் சோப், சலவை தூள் போன்றவற்றை நன்கு அலசி கழுவா விட்டால் கூட, அதனால் கூட அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் சரும பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஹாஸ்டல் வாழ்க்கையில் ஆண்களிடன் சருமப் பிரச்சனைகள் இலகுவாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றிக் கொள்வது உண்டு. அதற்கு முக்கிய காரணம் நண்பர்களின் ஜட்டியை அணிவது ஆகும். ஒரே மாதிரியான ஜட்டியை வாங்கி அணிவதை தவிர்ப்பதன் மூலமும், தனியாக உங்கள் ஜட்டிகளை, துண்டுகளை காய வைப்பதன் மூலமும் சரும நோய்கள் பரவலடைவதை தவிர்க்கலாம்.
ஜாக் இட்ச் (Jock Itch) என்பது பொதுவாக தொடையிடுக்குப் படை அல்லது கழிப்பறைப்படை என தமிழில் அழைக்கப்படும் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது இடுப்பு, தொடை மற்றும் பிட்டம் போன்ற ஈரப்பதமான, சூடான சரும பகுதிகளில் கடுமையான அரிப்பு, சிவப்பு தடிப்புகள் மற்றும் தோலுரிதலை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும், மேலும் இது தொற்றக்கூடியது. சரும நோய்கள் உங்களுக்கு தொற்றினால் அவ்விடங்களை நன்கு சோப் போட்டு கழுவி, உலர வைத்து, அதற்குரிய மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்தவும். சரும நோயை கண்டு கொள்ளாமல் விட்டால் அது தீவிரமடைந்து நிரந்தரமான சரும மாற்றங்களை உருவாக்கலாம். உதாரணமாக: தோல் கருமை நிறமடைதல், தோல் தடிமனாதல்
ஹாஸ்டல் வாழ்க்கையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள் தமது நண்பர்களுடன் பாலியல் ரீதியான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்வது உண்டு. உங்களுக்கு பால்வினை நோய் தொற்றுகள் இல்லாவிட்டால் கூட, உங்களிடம் உள்ள சரும பிரச்சனைகள் கூட உங்கள் நண்பர்களுக்கு தொற்றிக் கொல்லலாம். அதன் காரணமாகவே நண்பனுக்கு தொடை இடுக்கில் கல்லு வெட்டும் போது கூட நன்கு பார்த்து வெட்ட வேண்டும் என்கிறார்கள்.
கரடிகள் போல உடல் முழுதும் முடி வளர்த்திருக்கும் ஆண்களுக்கு அந்தரங்கப் பேன் தொற்று ஏற்பட்டால் கொடுமையாக இருக்கும். அந்தரங்கப் பேன்கள் (Pubic Lice) என்பது அந்தரங்கப் பகுதிகளில் வாழும் சிறிய ஒட்டுண்ணிகள், இவை நண்டு போன்ற வடிவத்தில் இருப்பதால் 'நண்டுகள்' (Crabs) என்றும் அழைக்கப்படுகின்றன. இது முக்கியமாக பாலியல் உறவு, நெருக்கமான உடல் தொடர்பு அல்லது பாதிக்கப்பட்ட ஆடைகள்/படுக்கை விரிப்புகள் மூலம் பரவுகிறது.
சில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உங்கள் சுன்னி முடி பகுதியில், ஆண்குறியின் மொட்டில் அரிப்பு, சிரங்கு போன்ற நிலைமை ஏற்பட்டால், அவற்றை உண்பதை தவிர்க்கவும்.
சில சரும பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வதன் மூலம் அது தீவிரமடைவதை தடுக்கலாம். வைத்திய ஆலோசனை இன்றி எந்த மருந்துகளையும் அந்தரங்கப் பகுதிகளில் பயன்படுத்த வேண்டாம்.
அந்தரங்கப் பகுதியிலும் அதிகம் வியர்க்கும். அந்தப் பகுதியை குளிக்கும் போது ஆண்கள் நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
குளிக்கும் போதும், சிறுநீர் கழித்த பின்னரும் ஆண்குறியின் மொட்டை நீரில் அலசுவது சிறந்தது. சுன்னி முடி பகுதியில் அரிப்பு அதிகமானால், அதனை சொறியாமல் உடனே அந்தப் பகுதியை நன்கு சோப் போட்டு கழுவுவது சிறந்தது.
அந்தரங்கப் பகுதியில் சரும பிரச்சனை ஏற்பட்டால் அது சரியாகும் வரையாவது ஆண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். நமது சமூகத்தில் ஆண்கள் இரவு நேரங்களில், அல்லது வீட்டில் இருக்கும் போது லுங்கி, வேட்டி அணிவது கூட ஒருவகையில் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் சரும பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
நீண்ட நேரம் இறுக்கமான ஆடைகளை, அல்லது உள்ளாடைகளை ஏதோ ஒரு தேவை நிமித்தம் அணிந்திருந்தால், அவற்றை கழட்டியவுடன் குளித்து விட்டு தளர்வான ஆடைகள் அணிந்திருப்பது சிறந்தது.
ஆண்குறியின் மொட்டில் கழுத்துப் பகுதியில்(Corona of Penis Glans) முத்துக் கட்டிகள் போல கோர்வையாக சிறிய பருக்கள் போன்ற அமைப்பு உள்ளதா? அது உங்கள் ஆண்குறியின் ஒரு பாகமாகும். இவையும் எண்ணெய் சுரப்பிகள் ஆகும். இவை ஆண்குறியின் மொட்டை ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகின்றது. அதனை ஆங்கிலத்தில் Pearly Penile Papules என்பர்.
உங்கள் ஆண்குறியின் தண்டு, விதைப்பையில் தோலின் நிறத்தை ஒத்த, அல்லது அதனை விட சற்று வெளிறிய நிறத்தில் சிறிய பருக்கள் போன்ற அமைப்பு உள்ளதா? அது உங்கள் சுன்னியில் முடிகள் உருவாகும், எண்ணெய் சுரப்பிகள் உருவாகும் பகுதியாகும். அதனை Fordyce Spots என்பர்.













Comments
Post a Comment