காவி வேட்டி என்பது காவி நிறத்தினால் ஆன வேட்டிகளைக் குறிக்கும். காவி வேட்டி என்பது காவி நிற சாயத்தால்(மூலிகைகள் அல்லது இயற்கை நிறமூட்டிகள்) சாயம் பூசப்பட்ட காட்டன் வேட்டியாகும். இது ஆன்மீகத்தில் துறவறத்தின் சின்னமாகவும், தியாகத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
இதுவும் ஒரு வகையான கலர் வேட்டியாகும். இருப்பினும் இது இந்து மதம் சார்ந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால், இதனை ஆண்கள் இந்து மதம் சடங்குகள், கோயில் திருவிழாக்கள், பூஜைகளின் போது அதிகம் அணிவர். இருப்பினும் இந்துகள் அல்லாத ஆண்களும் காவி வேட்டி அணியலாம்.
பொதுவாக இவை மஞ்சள், சிவப்பு நிறங்களை ஒத்து இருக்காது. அந்த நிற வேட்டிகள் தனியாக தெரியும். அநேகமாக செம்மஞ்சள், சந்தண நிறங்களில் வெளிர் சாயல் முதல், அடர் சாயல் வரை பல வகையான நிற சாயல்களில்(Shades) கிடைக்கும்.




























Comments
Post a Comment