ஆண்களின் ஜட்டி முதற்கொண்டு சட்டை, பேண்ட் என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு உள்பக்கம் புறப்பக்கம் என இரண்டு பக்கம் உள்ளது.
யாராலும் உள்பக்கத்தை வெளியே எடுத்து சட்டை, பேண்ட், ஜீன்ஸ், ஷாட்ஸ் போன்றவற்றை அணிய முடியாது. ஆனால் இலாஸ்டிக் வைத்த பேண்ட்/ஷார்ட்ஸ், டீ-சேர்ட் போன்றவற்றின் உள்பக்கத்தை வெளியே எடுத்து அணிய முடியும். அவ்வாறு அணிந்தால் உங்கள் மற்றவர்கள் விநோதமாக பார்ப்பார்கள்.
இருப்பினும் கைகளுக்கு அணியும் கையுறை, கால்களுக்கு அணியும் சாக்ஸ், மற்றும் ஆண்களின் ஜட்டி, பனியன் போன்றவற்றை ஆண்கள் விரும்பினால் உள்பக்கத்தை வெளியே எடுத்து விஷேட காரணங்களுக்காக அணிய முடியும். உதாரணமாக: கறை/அழுக்கு படித்தல்
சில ஆண்கள் லுங்கியின் மறைவில் அல்லது துண்டின் உதவியுடன் அவசர அவசரமாக ஜட்டியை அணிய முற்படும் போது எது உள்பக்கம், எது வெளிப்பக்கம் என்று பார்க்காமல் ஜட்டியை பிரட்டி அணிவதும் உண்டு.
உடலில் இருந்து வெளியேறிய அழுக்குகள், வியர்வை போன்றவை படிந்த உள்ளாடைகளை அலசி, துவைத்து, காயப்போடாமல் மீண்டு மீண்டும் அணிவது ஆரோக்கியமானதல்ல. ஜட்டியின் உள்பக்கத்தை வெளியே எடுத்து பக்கத்தை மாற்றினால் அது சுத்தமாகி விட்டாது. அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் வியர்வை, அழுக்குகளை உள்ளாடைகள் அகத்துறிஞ்சு அகற்றும். ஆகவே எப்படி அணிந்தாலும் அழுக்கு ஜட்டி அழுக்கு ஜட்டி தான்.

Comments
Post a Comment