வெள்ளை நிற உள்ளாடைகளை அணிவது சுலபமாக இருந்தாலும், அவற்றை பராமரிப்பது சற்று கடினமாகும். ஏனைய ஆடைகளுடன் சேர்ந்து அலசினால் அவற்றின் சாயம் இவற்றில் ஊறி விடும். உடனுக்குடன் அழுக்குகளையும், கறைகளையும் சுத்தம் செய்யவிட்டால் அவற்றை நீக்குவது கடினமாகலாம். வெள்ளை நிற உள்ளாடைகளை நீண்ட காலம் பயன்படுத்துவது மிகவும் எளிதல்ல. அதனால் அடிக்கடி புது ஜட்டி வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு ஆண் வெள்ளை நிற ஜட்டி, பனியனை அணிகிறான் என்றால் அவன் சுத்தம், தூய்மை, சுகாதாரம் போன்றவற்றிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் ஆணாக பார்க்கப்படுகின்றான்.
ஏனைய நிற உள்ளாடைகளை விட வெள்ளை நிற உள்ளாடைகளில் சீக்கிரம் அழுக்கு படிந்து விடும், கறைகள் ஏற்பட்டு விடும். ஆகவே சுத்தமாக இருப்பவர்களால் தான் தினமும் வெள்ளை நிற உள்ளாடைகளை பயமில்லாமல் அணிய முடியும்.
அது மாத்திரமல்ல, பொதுவாகவே ஆண்கள் அணிந்திருக்கும் சட்டை, பேண்ட் விலகி அவன் அணிந்திருக்கும் வெள்ளை நிற ஜட்டி, அல்லது ஜட்டியின் Waistband வெளியில் தெரிந்தால் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும். அதே போன்றே சட்டையின் கழுத்து பகுதியின் வாயிலாக, அல்லது நெஞ்சு தெரிய சட்டையின் பட்டன்களை கழட்டி சேர்ட் அணிந்திருக்கும் ஆண்களின் பனியனின் ஸ்ராப் வெளித்தெரிவதும் அவர்களின் கவர்ச்சியை அதிகப்படுத்தும்.









Comments
Post a Comment