மல்டிவேர்ஸ்(Multiverse - பல பேரண்டங்கள்) என்பது நாம் வாழும் இந்த ஒரு பிரபஞ்சத்தைத்(Universe) தாண்டி, எண்ணற்ற மாற்றுப் பிரபஞ்சங்கள் இணையாக இருக்கலாம் என்ற ஒரு கோட்பாட்டு அறிவியல் கருத்தாக்கம் ஆகும்.
இந்த கருத்தாக்கம் Spider-Man: No Way Home(2021) திரைப்படத்தில் உள்வாங்கப்பட்டதில் இருந்து நாம் அதுவரையில் பார்த்திருந்த ஸ்பைடர்மென் படங்களே வித்தியாசமாக மாறின. அத்துடன் இந்தப் படம் மூலமே முந்தைய ஸ்பைடர்மென் நடிகர்கள் புத்துயிர் பெற்றனர்.
Multiverse அறிவியர் கருத்தாக்கப் பார்வையில் வெவ்வேறு உலகில் வாழும் வெவ்வேறு ஸ்பைடர்மென்கள் வித்தியாசமான வாழ்க்கை நிலைகளை கொண்டிருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
Spider-Man: Homecoming(2017) திரைப்படம் மூலம் ஸ்பைடர்மெனாக அறிமுகமான Tom Holland, GQ (Gentlemen's Quarterly) என்னும் ஆண்கள் சஞ்சிகைக்கு 2019 ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலில் ஒரு Gay Spider-Man உருவாக வேண்டும், அதுவே ஒரு முற்போக்கு சிந்தனையாக அமையும். அவ்வாறு உருவானால் அவருடன் தான் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். அவருக்கு முன்னரே Multiverse தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததால், அவர் அவ்வாறு கூறினாரா?
ஒவ்வொரு உலகிலும் ஒவ்வொரு விதமான ஸ்பைடர்மென்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒருவர் தன்னினச்சேர்க்கையாளராக இருப்பது தான் நியாயமானது. நீங்க என்ன நினைக்கிறீர்கள்?




















Comments
Post a Comment