ஆண்கள் நீளமான வேட்டியை அணிவதற்கு கற்றுக் கொள்ள முன்னர், வேட்டியை எப்படி அணிவது என்று கற்றுக் கொள்ள வேண்டும். வேட்டியின் நீளம் 4 முழத்தில் ஆரம்பித்து 10 முழம் வரை சந்தையில் விற்பனைக்கு உள்ளது.
நான்கு முழம்(4 Mulam / 2 Meter) வேட்டியை Single Dhoti/Veshti என்பர். எட்டு முழம்(8 Mulam / 3.60 Meter) வேட்டியை Double Dhoti/Veshti என்பர். அங்கவஸ்திரத்துடன்(2.30 Meter) கூடிய ஒன்பது முழம்(9X5 / 4.15 Meter) வேட்டியை பஞ்சகச்சம் வேட்டி(Panchakacham with Angavasthram) என்பர். Angavasthram என்பது டவல்/துண்டு/சால்வை(Shawl/Towel/Thundu/Salvai) எனவும் அறியப்படும்.
பஞ்சகச்சம் என்பது ஆண்கள் பாரம்பரியமாக அணியும் ஒரு சிறப்பான வேஷ்டி கட்டும் முறையாகும். இதே போன்று பத்து முழம்(10X6 / 4.62 Meter) வேட்டியும் சந்தையில் உள்ளது. அதற்கு 2.77 Meter அங்கவஸ்திரம் கொடுக்கப்படும்.
நான்கு முழம் வேட்டியை எப்படி அணிவது என்ற அடிப்படையான விடையத்தை முதலில் பார்ப்போம். ஜட்டி அணிந்து நின்று கொண்டு, உங்களைச் சூழ வேட்டியின் இரு முனைகளையும் இருகைகளிலும் பிடித்திருக்கவும்.
கால்களை தேவையான அளவு அகட்டி நிற்கவும். வேட்டியின் கரை எந்தப் பக்கம் வர வேண்டுமோ, அந்தப் பக்கத்து காலின் மேலே வேட்டியின் கரை நேராக இருக்கும் வகையில் கரை உள்ள வேட்டியின் பக்க முனையை பிடித்துப் பார்த்து தேவைக்கு ஏற்ப Adjust செய்யவும்.
அதாவது இடது கையில் இருக்கும் வேட்டியின் கரையுடன் கூடிய முனையை பிடித்து வலது பக்க இடுப்பில் பிடித்துக் கொண்டு, அதன் மேலாக வலது கையில் இருக்கும் வேட்டியின் முனையை இறுக்கமாக இழுத்துக் கொண்டு சென்று இடது பக்க இடுப்பு ஓரமாக பிடிக்கவும்.
நீங்கள் விரும்பினால் ஜட்டியின் இனுள் தற்காலிகமாக வேட்டியின் முனைகளை சொருகி வைத்திருக்கலாம்.
உங்கள் இடுப்பைத் தொடும் பகுதியைப் பிடித்துக் கொண்டு, மேலதிகமக இருக்கும் வேட்டியை உள்பக்கமாக மடித்து வெளிப்பக்கம் தூக்கி தொங்க விடவும்.
அவ்வாறு செய்வதன் மூலம் வேட்டியின் மடிப்பு உங்கள் காலில் இடறுண்டாது/இடறாது. அதே நேரம், உள்பக்கமாக மடித்த வேட்டி கீழே தொங்காது. உங்கள் தேவைக்கு ஏற்ப வேட்டியினை மடித்து Adjust செய்த பின்னர்,
அதற்கு மேலே இறுக்கமாக, கரை உள்ள வேட்டியின் முனையை(அதாவது இடது கையில் உள்ள முனையை) இழுத்து வலது பக்க இடுப்புப் பகுதியில் பிடித்துக் கொண்டு, இடது பக்க இடுப்புப் பகுதியில் உள்ள வேட்டியின் முனையை வெளிப்பக்கமாக கீழ் நோக்கி மடித்து உருட்டி விடவும்.
அதே போலே வலது பக்க இடுப்புப் பகுதியில் உள்ள கரையுடன் கூடிய முனையை, கரை வலது காலின் மேல் நேராக இருக்கும் வகையில் பிடித்து, அதன் முனையை திருகி, வலது பக்க இடுப்புப் பகுதியில் சொருகி விடவும்.
உங்கள் வேட்டி லூஸாவதாக(தளர்வாக இருப்பது போல) நீங்கள் உணர்ந்தால், வேட்டியை மீண்டும் கழட்டி, இடது பக்க இடுப்புப் பகுதியில் இருக்கும் முனையை இறுக்கி, மீண்டும் அணிந்தால் போதுமானதாக இருக்கும்.
Read More: ஆண்கள் பஞ்சகச்சம்(9 X 5) வேட்டியை அணிவது எப்படி?




































Comments
Post a Comment