அதிகமான ஆண்கள் விரும்பிப் பார்க்கும் விளையாட்டுக்களில் பிரபலமானவை Cricket, மற்றும் Football ஆகும். அதில் குழுவாக, சிறப்பாக விளையாடினால் வெற்றிக் கோப்பையை இலகுவாக கைப்பற்றிக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு என பிரத்தியேகமான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க வேண்டும் என்றால், களத்தில் சிறப்பாக விளையாடினால் மாத்திரம் போதாது.
உங்கள் ஆண்மையான தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட வேண்டும். அதற்கு உங்கள் உடல் நிறை ஆரோக்கியமான மட்டத்தில் இருக்க வேண்டும். உங்கள் உடல் கட்டுடலாக இருப்பது மேலும் சிறப்பு. அதே நேரம் உங்கள் Grooming Sense, அதாவது தலைமுடி, தாடி, மீசை, புருவம் போன்றவற்றை பராமரிக்கும் விதம் கூட உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்னும் விளக்கமாக சொல்வதாக இருந்தால்,
சுய பராமரிப்பு உணர்வு(Grooming Sense) என்பது உங்கள் உடல், முடி, சருமம் மற்றும் ஆடைகளைச் சமூக அல்லது தொழில்முறைச் சூழல்களுக்கு ஏற்றவாறு சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்கத் தேவையான நடைமுறை விழிப்புணர்வையும் அன்றாடப் பழக்கவழக்கங்களையும் கொண்டிருப்பதாகும். இது தன்னம்பிக்கையை வளர்க்கிறது, நோய்களைத் தடுக்கிறது, மேலும் ஒரு நேர்மறையான முதல் அபிப்ராயத்தை ஏற்படுத்த உதவுகிறது.
அந்த வகையில் சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் அணிகளை நன்கு அவதானித்தால், அதில் இந்திய அணி வீரர்கள் மாத்திரம் தனித்துவமாக தெரியும் வகையில் சிறப்பான Grooming Sense யை வெளிப்படுத்துகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.
சில வேளைகளில் இது கூட Trimmer, Hair Clipper போன்றவற்றை உற்பத்தி செய்யும் கம்பனிகளின் வியாபார தந்திரோபாயமாக இருக்கலாம். டீவியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பார்த்து விட்டு, அவனை மாதிரி சிரைக்கனும்டா! என்று சலூனுக்கு கெளம்பிய ஆண்கள் அதிகம் தானே?





Comments
Post a Comment