சூப்பர் ஹீரோக்களாக நடிக்கும் நடிகர்கள் எப்போதும் தமது உடலை கட்டுக் கோப்பாக(Jacked) வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் Reboot செய்து மீண்டும் வேறு ஒரு நடிகரை வைத்து படம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த வகையில் பலருக்கு ஒரு Role Model ஆக திகழ்கிறார் Tom Holland. அவருடைய நடிப்பில் அண்மையில் வெளியாகிய Spider-Man: Brand New Day(2026) திரைப்படத்தில் அவர் அறிமுகம் செய்திருந்த New Spiderman Costume பலரை திக்குமுக்காடச் செய்திருந்தது.
ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தில், பீட்டர் பார்க்கரிடம் மறைக்கப்பட்ட ஆயுதங்களோ அல்லது பதிவு செய்யும் கருவிகளோ இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, யெலெனா ஒரு ரஷ்ய பாணி குளியல் இல்லம் மற்றும் நீராவி ஸ்பாவிற்குள்(Russian-style bathhouse and steam spa) தனது ரகசிய சந்திப்பை ஏற்பாடு செய்கிறார். அதன் காரணமாக பீட்டர் பார்க்கர் யெலெனா பெலோவாவைச் சந்திக்கும் போது ஒரு துண்டையும் தனது ஸ்பைடர்-மேன் முகமூடியையும் மட்டும் அணிந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அப்போது வெளிப்படுத்தப்படும் Tom Holland இன் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பலரையும் கவர்ந்திருந்தது. ஆனால் அந்தக் காட்சியைப் பார்த்திருந்த பலர், டவலுக்கு உள்ளே ஜட்டி போட்டிருக்கும் போது ஏன் பீட்டர், டவலுடன் வந்திருந்தார்? டவலையும் கழட்டி விட்டு ஜட்டியுடன் நின்று எங்கள் கண்களுக்கு விருந்தளித்திருக்கலாமே என்று கூறியிருந்தனர்.
சிலர் இதனை செலவு குறைவான ஹாலோவீன் ஆடை(Halloween Costume) என நகைச்சுவையாக கூறியிருந்தனர். ஸ்பைடர்மென் ரசிகர்கள் இனி ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு வெறும் டவல் மாத்திரம் அணிந்து செல்லலாம் என கூறியிருந்தனர். அந்த வகையில் பார்த்தால் ஸ்பைடர்மெனின் டவல் Towel Look நிச்சயமாக பலரது ஹாலோவீன் ஆடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.







Comments
Post a Comment