இன்டர்நெட்(இணையம்) மற்றும் சமூக வலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்தும், இணைய உலகத்தில் தீவிரமாகச் செயல்படும் எந்தவொரு நபரும் இணையவாசி(Netizen/நெட்டிசன்) என்று அழைக்கப்படுகிறார். அவ்வாறான இணையவாசிகள் பலர் சந்தேகப்படுகிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்கள் மனைவியை சந்தேகப்படுவீர்களா?

கடந்த நான்கு வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஒரு ஆண், தனது ஐந்து மாத குழந்தையை முதல் முறை தனது மனைவியுடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரை தவறாக கணக்குப் போட வைத்தது.
எப்படிப் பார்த்தாலும் கணக்கு தப்பா இருக்கேடா! ஒரு வேளை கம்பிக்கு நடுவால விட்டிருப்பானா? வேற எவன் கூடவோ படுத்து புள்ளைய பெத்துட்டு இவன் பெயரை இன்சியலாக போட வந்திருக்காள் என்று இந்த உலகவே அவளுடைய கற்பை சந்தேகப்பட்டது.
Bluetooth or Wifi? எப்படி நடந்து இருக்கும்? Cable Connection போல, Quick Share அல்லது Airdrop மாதிரி புதுசா ஏதாவது இறங்கியிருக்குமா?
ஆனால் உண்மையிலேயே அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என தெரிய வந்த போது எல்லோரும் வாய் மேலே விரலை வைக்கும் படி ஆகி விட்டது. ஆமாங்க, குறுகிய கால சிறைக்கைதிகளால் தமது மனைவியுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமாம். அதற்கு சிறைக்கைதிகள் பரோலில் வந்து, மனைவியுடன் உடலுறவு கொள்வார்களலாம்.
இந்தியாவில் சில மாநிலங்களின் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, கைதிகள் தங்களின் வம்சவிருத்திக்காக (குழந்தை பெற்றுக்கொள்ள) பரோல்(Parole) பெற சட்டப்பூர்வமாக அனுமதி உண்டு. ஆனால், இது அனைத்துக் கைதிகளுக்கும் தானாகவே கிடைக்கும் ஒரு பொதுவான உரிமை அல்ல.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் போன்ற சில நீதிமன்றங்கள், குழந்தை பெற்றுக்கொள்வதற்கான "தாம்பத்திய உரிமையை"(Conjugal Rights) ஒரு கைதியின் அடிப்படை உரிமைகளின் கீழ் வரும் என்று தீர்ப்பளித்துள்ளன.
வம்சவிருத்திக்காக அல்லது மனைவியின் மருத்துவத் தேவைகளுக்காக(உதாரணமாக: செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை) நீண்டகால அல்லது ஆயுள் தண்டனைக் கைதிகள் குறிப்பிட்ட நாட்களுக்கு பரோலில் செல்ல நீதிமன்றங்கள் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குகின்றன.
குறுகிய கால தண்டனை பெற்ற கைதிகளுக்கு(சில மாதங்கள் அல்லது ஒரு வருடம்) பொதுவாக இதற்கென தனியாக பரோல் வழங்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்களின் தண்டனைக் காலம் விரைவில் முடிந்துவிடும் என்பதால், அவர்கள் விடுதலையான பின் குடும்ப வாழ்க்கையைத் தொடரலாம் எனக் கருதப்படுகிறது.
பயங்கரவாதக் குற்றங்கள், தேசத் துரோகம் அல்லது மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய பரோல் மறுக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ஒவ்வொரு வழக்கின் பின்னணி, கைதியின் சிறை நடத்தை மற்றும் மனைவியின் வயது/மருத்துவ நிலை ஆகியவற்றைப் பொறுத்தே நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும்.
Keywords: ஜெயிலில் இருக்கும் ஆண்களால் அவர்களின் மனைவியை கர்ப்பமாக்க முடியுமா? புருஷன் ஜெயிலில் இருக்கும் போது மனைவி கர்ப்பமாவது எப்படி? புருஷன் வெளிநாட்டில் இருக்கும் போது உள்நாட்டில் மனைவி கர்ப்பமாவது எப்படி?
Comments
Post a Comment