பால்வினை நோய் தொற்று ஏற்படுவதை PREP மற்றும் PEP மூலம் தடுக்கலாமா? இல்லை, வழக்கமான HIV PrEP மற்றும் PEP மாத்திரைகள் அனைத்து பால்வினை நோய்த்தொற்றுகளையும்(STIs) தடுக்காது; அவை HIV தொற்றை மட்டுமே தடுக்கின்றன.
கிளமீடியா, வெட்டை நோய்(Gonorrhea), மற்றும் கிரந்தி(Syphilis) போன்ற பிற பால்வினை நோய்களைத் தடுக்க Doxy-PEP என்ற புதிய மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அவை முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை.
PrEP(Pre-Exposure Prophylaxis) என்பது எச்.ஐ.வி(HIV) தொற்று ஏற்படாமல் இருக்க, உடலுறவுக்கு முன்பே தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் தினசரி மாத்திரையாகும். இது முறையாகப் பயன்படுத்தும்போது HIV பரவும் அபாயத்தை 99% வரை குறைக்கிறது.
PEP(Post-Exposure Prophylaxis) என்பது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பிறகு அல்லது காண்டல் போட்டு உடலுறவு கொள்ளும் போது ஆணுறை கிழிந்தால், அவசரமாக எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தடுக்க 72 மணி நேரத்திற்குள்(3 நாட்களுக்குள்) ஆரம்பிக்கப்பட வேண்டிய 28 நாட்கள் கொண்ட மாத்திரை சிகிச்சை முறை ஆகும்.
Doxy-PEP என்பது டாக்ஸிசைக்ளின் (Doxycycline) என்ற ஆண்டிபயாடிக் மாத்திரையைப் பயன்படுத்தி சில பால்வினை நோய் தொற்றுக்களை தடுக்கும் புதிய முறையாகும்.
பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 72 மணி நேரத்திற்குள் ஒரு டோஸ்(200 mg) எடுத்துக்கொள்வதன் மூலம், பாக்டீரியாவால் ஏற்படும் பால்வினை நோய்களான கிளமீடியா, கிரந்தி(Syphilis), மற்றும் வெட்டை நோய்(Gonorrhea) ஆகியவற்றின் பாதிப்பை கணிசமாகக் குறைக்கலாம்.
PrEP அல்லது PEP மாத்திரைகள் எடுத்தாலும், எச்.ஐ.வி தவிர்த்த பிற பால்வினை நோய்கள்(உதாரணமாக: ஹெர்பெஸ், HPV) பரவாமல் தடுக்க ஆணுறைகளைப் பயன்படுத்துவதே.. ஒரே சிறந்த மற்றும் பாதுகாப்பான வழியாகும்.
பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவலடையும் பால்வினை நோய்களும் அவற்றை தடுப்பதற்காக மாத்திரைகள், அந்த மாத்திரைகளின் பாதுகாப்பு திறன்(2026 தரவுகள் அடிப்படையில்) மற்றும் தடுப்பூசிகள்.
இந்த தகவலானது MSM(Men who have Sex with Men, including gay and bisexual men) - Gay and Bisexual Men) இல் ஈடுபடுபவர்களுக்கு அவசியமானவையாகும்.
Success rates mentioned by percentage:
HIV: HIV PrEP & PEP (80% to 90%)
Syphilis: Doxy PEP (70% to 75%)
Gonorrhea: Doxy PEP (50% to 60%)
Chlamydia: Doxy PEP (70% to 90%)
HPV: HPV vaccine
Hepatitis B: Hepatitis B vaccine
Hepatitis A: Hepatitis A vaccine
Mpox: Mpox vaccine
Herpes: No prevention; avoid contact if you see someone with visible herpes on their genitals or mouth. அறிகுறிகள் தென்பட்டால், அந்த நபருடன் உடலுறவு கொள்வதை தவிர்ப்பது மாத்திரமே சிறந்த தடுப்பு முறையாகும்.
It is better to avoid having sex with them if you see someone with visible herpes on his/her genitals and mouth. There are ways to lower the chance of getting herpes, such as using condoms and taking daily antiviral medicine, though these do not stop it completely. Avoiding sex when sores or blisters are visible on the mouth or genitals is a smart step to stop the virus from spreading.
பால்வினை நோய் தொற்றுக்களை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் பற்றிய விபரங்கள்(Screening, and Tests for the STI diseases)
HIV: HIV 1/2 (approximately ₹200)
Syphilis: VDRL or RPR (approximately ₹300)
Gonorrhea: NAAT (approximately ₹900) or gram stain (approximately ₹200)
NAAT is highly recommended if you suspect gonorrhea, but routine checks are not necessary unless you experience unusual discharge.
கொனேரியா எனப்படும் வெட்டை நோய்(Gonorrhoeae) தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டால் NAAT பரிசோதனை அவசியம் செய்யவும். ஆனால் இதனை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் அந்தரங்க உறுப்புகளில் இருந்து வித்தியாசமான வெளியேற்றங்கள்(திரவங்கள்) வெளியேறினால் மாத்திரம் செய்யவும்.
Chlamydia: NAAT (approximately ₹900)
Routine checks are not needed unless you notice unusual marks.
வித்தியாசமான அடையாளங்கள்(Marks) தென்படாதவிடத்து இதனை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
Hepatitis B: HBsAG (approximately ₹300)
Hepatitis A: Anti HAV IgM (approximately ₹500)
Herpes: HSV PCR (approximately ₹2000)
Routine checks are not needed unless you have an unhealed wound on the genital area or mouth.
அந்தரங்கப் பகுதியில் நீண்ட நாட்களாக குணமாகாத காயங்கள் இல்லாதவிடத்து இதனை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
Mpox: Usually no need for testing because it's rare, and you cannot return to normal after being affected.
Every test should be performed 40 days after exposure.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனைகளை தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் நடந்த நாளில் இருந்து 40 நாட்களுக்கு பின்னரே செய்ய வேண்டும். Every Test should be perform after 40 days of the exposure.
Thank You Don Raj(Facebook)
Keywords: PREP மற்றும் PEP மூலம் எந்தளவுக்கு பால்வினை நோய் தொற்றை தடுக்கலாம்?


Comments
Post a Comment