உங்கள் பையனின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம்/கால சர்ப்ப தோஷம்(ராகு-கேது தோஷம்) அல்லது களத்திர தோஷம் போன்ற திருமணத் தடைகள் இருந்தால், பயப்படத் தேவையில்லை. ஜோதிட முறைப்படி உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தோஷங்களின் தாக்கத்தைக் குறைத்து நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கலாம். ஆனால் அவன் வயதுக்கு வரும் காலத்தில் ஒரு முக்கியமான பரிகாரத்தை பெற்றோர்கள் செய்ய வேண்டும்.
திருமணம் தாமதமாவதற்காக தோஷங்கள் உங்கள் பையனின் ஜாதகத்தில் இருப்பதை நீங்கள் ஆரம்பத்திலேயே இனங்கண்டால், உங்கள் பையனுக்கு அவசியம் ஆணுறை பயன்படுத்த கற்றுக் கொடுங்கள்.
திருமண தோஷங்கள் இருக்கும் ஆண்கள் இளவயதில்(30 வயதிற்கு முன்னர்) காதல் வயப்பட்டால், அல்லது திருமணம் செய்து கொண்டால் அது விவாகரத்தில் முடிய அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான சூழலில் தம்பதியினர் இருவருக்குள்ளும் ஒரு சிறந்த புரிதல் ஏற்படும் வரை உங்கள் மகனை காண்டம் அணிந்து உடலுறவு வைத்துக் கொள்ள பரிந்துரைப்பதன் மூலம், விவாகரத்து ஆகும் நிலை ஏற்பட்டால் கூட அங்கு ஒரு குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்காது.
காதலிக்கும் போது உங்கள் மகனால் ஒரு பெண் கர்ப்பமாகி, அவளது வாழ்க்கை சீரழிவதையும் தடுக்கக் கூடியதாக இருக்கும்.
உங்கள் வீட்டில் ஆண்களுக்கான காண்டம் உபயோகிப்பதை சாதாரண ஒன்றாக மாற்றுங்கள். இதன் மூலம் உங்கள் மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதால் ஏற்படும் மன அழுத்தங்கள் காரணமாக தவறான வழியில் செல்ல நேர்ந்தாலும் நீங்கள் சிறுவயதிலேயே பழக்கிய காண்டம் அணியும் பழக்கம் அவனுக்கு கடைசி வரை உதவியாக இருக்கும்.
தப்பு பண்ணினாலும், அதனை நினைத்து எதிர்காலத்தில் வருத்தப்படாத வகையில் தப்புப் பண்ண ஆண்களுக்கு ஆணுறை உதவியாக இருக்கும்.
Read More: ஆண்கள் ஆணுறை அணிவது எப்படி?
7-ஆம் இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள் அமைவது அல்லது 7-ஆம் அதிபதி பலவீனம் அடைவது களத்திர தோஷம் ஆகும். இதனால் தாமத திருமணம், கருத்து வேறுபாடு அல்லது பிரிவினை போன்ற திருமணத் தடை சிக்கல்கள் ஏற்படலாம்.
ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்தால் நாக தோஷம் உண்டாகும். இது முற்பிறவியிலோ அல்லது நடப்பு காலத்திலோ நாகங்களுக்குச் செய்த தீங்குகளால் ஏற்படும் சாபமாகக் கருதப்படுகிறது. இது திருமணத் தடை, புத்திர தாமசம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஜாதகத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்புக் கிரகங்களுக்கு இடையில் மற்ற ஏழு கிரகங்களும்(சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி) அடைபட்டு இருக்கும் நிலை கால சர்ப்ப தோஷம் எனப்படும்.
களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகரை அதே போன்ற தோஷம் உள்ள மற்றொரு ஜாதகருடன் சேர்த்துத் திருமணம் செய்து வைத்தல் உகந்தது.
ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் அமர்ந்தால் அது செவ்வாய் தோஷம்(அங்காரக தோஷம்) எனப்படுகிறது. இதனால் திருமணத் தாமதம், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மன உளைச்சல்கள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி பெற்றாலோ அல்லது மகரத்தில் உச்சம் பெற்றாலோ தோஷம் இல்லை. செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெற்றால் தோஷம் செயல்படாது. செவ்வாயுடன் குரு அல்லது சந்திரன் சேர்ந்திருந்தாலும் தோஷம் நிவர்த்தியாகும். செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகரை அதே போன்ற தோஷம் உள்ள மற்றொரு ஜாதகருடன் சேர்த்துத் திருமணம் செய்து வைத்தல் உகந்தது.
ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம்(குறிப்பாக செவ்வாய் பகவான் 7, 8 அல்லது 2-ம் இடங்களில் இருப்பது) உள்ளவர்களுக்கு உடலுறவு வேட்கை மற்றும் காம உணர்வு சற்று அதிகமாக இருக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஜாதகத்தில் செவ்வாயும் காமத்தின் காரகரான சுக்கிரனும் சேர்ந்துள்ளவர்களுக்கு காதல் மற்றும் தாம்பத்திய ஆர்வம் அதிகரிகமாக இருக்கும். இது ஜோதிட நம்பிக்கையே தவிர, உடலியல் ரீதியான வேட்கை என்பது ஹார்மோன்கள் மற்றும் மனநலத்தையே சார்ந்துள்ளது.
Keywords: உங்கள் பையனுக்கு திருமணம் தள்ளிப் போகிறதா? பொருத்தமான வரன் அமையுதில்லையா? உங்கள் பையனுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லையா? திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணம். காலதாமத திருமணம். திருமண தோஷங்கள் எவை?




Comments
Post a Comment