பொதுவாக எல்லோருக்குமே Stage Fear என்பது இருக்கும். அதாவது முதல் முறையாக ஒரு மேடையில் ஏறி, மக்களைச் சந்திக்கும் போது நம்மை அறியாமல் ஒரு பதற்றம், ஒரு படபடப்பு, ஒரு நடுக்கம் ஏற்படும். பேச வார்த்தைகள் வராது. திக்கும். பேச வந்த விடையம் மறந்து விடும். அதனை ஒவ்வொரு ஆண்கள் ஒவ்வொரு வகையில் கையாள்வர்.
சிலர் முன் கூட்டியே மேடையில் பேசுவது போல பேசிப் பழகுவர். பேசும் போது பார்வையாளர்களின் கண்களை நேரடியாக பார்க்க மாட்டார்கள். வேறு ஏதோ ஒரு இடத்தில் பார்வையை வைத்துக் கொண்டு, யாரும் இல்லை என கற்பனை செய்து கொண்டு முன் கூட்டியே ஆயத்தம் செய்த Speech யை வழங்குவர்.
Stage Fear என்பது பல பேர் முன்பு பேசும்போதோ அல்லது நடிக்கும்போதோ ஏற்படும் தீவிரமான அச்சம் அல்லது பதற்றம் ஆகும். இது இதயத் துடிப்பு அதிகரித்தல், கை நடுங்குதல், தொண்டை வறண்டு போதல் போன்ற உடல் ரீதியான அறிகுறிகளை உருவாக்கும். இது பலருக்கு இயல்பான ஒரு உளவியல் நிலையாகும்
முதல் முறை ஏற்படும் அந்த பதற்றம், நாளடைவில் பல மேடைகளில் ஏறி இறங்கும் போது தானாகவே காணாமல் போய் விடும். சிலர் மேடைகளில் ஏறும் போது பார்வையாளர்களை பார்க்க மாட்டார்கள். மண்டபத்தின் பின்னால் இருக்கும் ஏதோ ஒரு மூலையை பார்த்துக் கொண்டு அந்த நிகழ்ச்சியில் இயல்பாக இருக்க முற்படுவர்.
ஆண்களுக்கு Stage Fear ஏற்பட்டால், ஏற்படும் பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவற்றை தவிர்க்க அடிக்கடி ஆடையை சரி செய்வர், Tie அணிந்திருந்தால் அதனை இறுக்குவர், அல்லது தளர்வடையச் செய்வர். சட்டையின் கைகளை மடித்திருந்தால், அதனை நேர்த்தியாக்க முயற்சிப்பர். ஜீன்ஸ்/பேண்டை மேலே தூக்கி விடுவர், குண்டியை தடவுவர், ஜீன்ஸ்/பேண்டின் ஜிப்பு மூடப்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி Check செய்வர். Belt யை Adjust செய்வர். தலைமுடியை அடிக்கடி சரி செய்யவர். தாடியை சொரிவர் அல்லது தடவுவர், கைகளை பாக்கெட்டுக்குள் விடுவர், அடிக்கடி தண்ணீர் குடிப்பர், அதிகம் வியர்க்கும், வேகமாக மூச்சு வாங்குதல், இது போன்ற பல நடத்தைகளை அவர்களிடம் அவதானிக்கலாம்.
மேடைப் பயத்தை வெல்லும் வழிகள்: பேசும் விஷயத்தை முன்கூட்டியே தெளிவாகத் தயாரித்துப் பயிற்சி செய்யுங்கள். கண்ணாடி முன்பு பயிற்சி எடுக்கவும். உங்களை நீங்களே பார்த்துக் கொண்டு பேசிப் பழகவும். மேடையேறும் முன் அமைதியாக ஆழ்ந்த மூச்சு பயிற்சி எடுக்கவும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் முன்பு பேசித் பழகி நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும்.
நடிகரும், தெலுங்கு பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை வெற்றியீட்டியவருமான Uppala Pavan Kumar, Nijame Rujuvainadhi திரைப்பட வெளியீட்டு விழாவில் பதற்றத்துடன் இருப்பதை அவதானித்த படக்குழுவைச் சேர்ந்த ஒரு நபர், அவரை ஆசுவாசப்படுத்தும்(அமைதியாக்கும்) காட்சி பலரது கவனத்தை சமூக வலைத்தளங்களில் ஈர்த்திருந்தது.
நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே அவரது நடத்தை, பதற்றமாக இருப்பதை உணர்த்தியது. அதனை அவதானித்த ஒருவர் அவரை கட்டியணைத்து, முதுகையும், வயிற்றையும் தடவிக் கொடுத்து அமைதிப்படுத்தி, ஒரு தோள் கொடுத்த தோழனாக நிகழ்ச்சி முடியும் வரை கூடவே இருந்தார்.











Comments
Post a Comment