கடுமையான வெயில் சூழலில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் ஏன் அணியும் ஆடைகளின் நிறம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்?
ஆண்கள் வெயிலில் விளையாடும் போது, ஆடைகளினால் மறைக்கப்படாத உடல் பகுதிகள் சூரிய ஓளியின் தாக்கத்தால் கருமை நிறமடைய அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் வெயிலில் விளையாடும் போது, அல்லது அதிக நேரம் வெளியில் செல்லும் போது, சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்களின்(UV rays) தாக்கத்தால், சருமத்தில் மெலனின்(Melanin) என்ற நிறமி அதிகமாக உற்பத்தியாகிறது. இதுவே சருமத்தைக் கருமையாக மாற்றுகிறது. இதனை சன் டேன்(Sun Tan) என்பர்.
வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு குறைந்தது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன்(Sunscreen) லோஷனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும்.
விளையாடும் போது முழு நீளக் கைகள் கொண்ட ஆடைகள்(Full Sleeve Jersey) மற்றும் தொப்பிகளைப்(Caps) பயன்படுத்த வேண்டும்.
ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஆடைகள் வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர் நிறத்தில் இருந்தால் அவை வெப்பத்தை மிகக்குறைவாகவே அகத்துறிஞ்சும். அதனால் நீங்கள் அதிகம் வெப்பமாக இருப்பது போல உணர மாட்டீர்கள்.
கருப்பு(Black), அடர்ந்த நீலம்(Dark Blue), அடர்ந்த சாம்பல்(Dark Grey) மற்றும் பழுப்பு(Brown) நிறங்களை வெயில் விளையாடும் பொது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை வெப்பத்தை அதிகமாக அகத்துறிஞ்சக் கூடிய நிறங்களாகும்.
அதிலும் இந்த கறுப்பு நிறம், சூரிய ஒளியில் உள்ள அனைத்து அலைநீளங்களையும்(நிறங்களையும்) இது தன்வயப்படுத்திக் கொள்கிறது. எந்த ஒளியையும் திருப்பி அனுப்புவதில்லை(பிரதிபலிப்பதில்லை). எனவே, இது மிக வேகமாக வெப்பமடைகிறது.
அதன் காரணமாக வெள்ளை நிற ஆடை அணியும் போது, அதில் கருப்பு நிற எழுத்துக்கள், அலங்கார வடிவங்கள் இருந்தால் கூட அவை உங்கள் சருமத்தை பாதிக்கலாம்.
ஆகஸ்ட மாத இறுதியில், இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியோன்றின் போது இந்திய கிரிக்கெட் விரர் Devdutt Padikkal(@devpadikkal19), "DEV 37" என கறுப்பு நிறத்தில் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற ஜெர்சியை அணிந்து அதிக நேரம் வெயிலில் நின்று விளையாடியமையால், ஜெர்சியின் பின்னால் இருந்த அந்த எழுத்துக்கள் அவரின் முதுகில் அடையாளத்தை(Jersey Tattoo) ஏற்படுத்தியதை, சட்டையைக் கழட்டி படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைப் பார்த்த பின்னராவது இந்திய கிரிக்கெட் சபை, கிரிக்கெட் வீரர்களுக்கான ஆடை வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம் விளையாட்டு வீரர்களும் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை அணிய வேண்டும்.
கண்களையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாக்க UV பாதுகாப்பு கொண்ட கண்ணாடிகளை(Sunglasses) அணியலாம்.
வெயிலில் அதிக நேரம் நின்றதால் ஏற்கனவே உங்கள் உடல் பகுதிகளில் சில டேன் ஆகியிருந்தால், சரும நிறத்தை மீட்டெடுக்க இவற்றைச் செய்யலாம்:
எலுமிச்சை சாறு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி, 15 நிமிடம் கழித்துக் கழுவலாம்.
தக்காளியில் உள்ள லைகோபீன்(Lycopene) கதிரியக்கப் பாதிப்பை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.
வெயிலினால் ஏற்பட்ட எரிச்சலைக் குறைத்து, கருமையை மெல்ல நீக்க கற்றாழை ஜெல்லைத் தினமும் தடவலாம்.
தயிர் மற்றும் கடலை மாவு கலந்து பூசினால் சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி(Exfoliation) டானை(Sun Tan) விரைவாகக் குறைக்கும்.
விளையாடி முடித்ததும் உடனே குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவது சருமத்தின் வெப்பத்தைக் குறைக்க உதவும்.
Keywords: வெயிலில் விளையாடும் போது ஏன் ஆடைகளின் நிறம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்? ஏன் ஆடைகளின் நிறம் தொடர்பில் விளையாட்டு வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும்? விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்து அணிய வேண்டிய ஆடைகளின் நிறங்கள்




Comments
Post a Comment