ஆண்கள் லுங்கியை இரண்டு வகையில் அணியலாம். ஒன்று லுங்கியை வேட்டி போல இடுப்பில் கட்டுவது. மற்றையது வேட்டி போல இருக்கும் லுங்கியின் முனைகளை இணைத்து, தைத்து ஒரு துணியினால் ஆன Tube போன்று உருவாக்கி அதனை கைலி, சாரமாக பயன்படுத்துவது.
ஆண்கள் லுங்கி வாங்கும் போதே அது தைத்த லுங்கியா? ஓரம் அடித்து தைக்காத லுங்கியா என்பதை கேட்டு வாங்க வேண்டும். பொதுவாக எல்லா லுங்கிகளும் ஓரம் அடித்து தைக்காமலேயே விற்கப்படுவது உண்டு.
லுங்கி ஓரம் அடிப்பது எப்படி? புதிய லுங்கியின் துணியின் இரண்டு பக்க ஓரங்களை(Side Edges) ஒன்று சேர்த்து இணைத்துத் தைப்பதே லுங்கி ஓரம் அடிப்பது அல்லது மூட்டுவது எனப்படும்.
லுங்கி துணியை நல்ல பக்கம் உள்ளே இருக்கிறவாறு இரண்டாக மடிக்கவும். அதாவது துணியின் உள் பக்கம் வெளியில் தெரிய வேண்டும். லுங்கியின் உள் பக்கத்தையும் வெளிப்பக்கத்தையும் கண்டறிய அவற்றின் நிறத்தை நன்கு அவதானிக்கவும். லுங்கியின் உள் பக்கத்தின் நிறம் சற்று வெளிரிப் போயிருக்கும். லுங்கியின் வெளிப்பக்கம் உள்பக்கதை விட நிறம் அதிகமாக இருக்கும்.
பின் குறிப்பு: சில லுங்கிகளி உள்பக்கம், வெளிப்பக்கத்டை இணங்கான முடியாது. இரண்டும் ஒரே மாதிரியே இருக்கும். ஆகவே நீங்கள் அதில் விரும்பிய ஒரு பக்கத்தை தெரிவு செய்து அதனை உள்பக்கமாக வைத்து லுங்கியின் ஓரத்தை அடிக்கலாம்.
லுங்கியின் இரண்டு பக்க திறந்த விளிம்புகளை(Edges) ஒன்றாகப் பிடித்துச் சமமாக வைக்கவும். விளிம்பிலிருந்து கால் இன்ச் இடைவெளியில் நேராக ஒரு தையல் போடவும்.
லுங்கி அவிழ்ந்து போகாமல் இருக்கவும், பலமாக இருக்கவும், அந்த தைத்த ஓரத்தை இன்னொரு முறை மடித்து அதன் மேல் மற்றொரு படிமானத் தையல்(Flat Lock or Double Stitch) போட வேண்டும்.
லுங்கியின் மேல் மற்றும் கீழ் பகுதிகள் ஏற்கனவே தையலோடு அல்லது கரை பகுதியுடன் இருக்கும். பக்கவாட்டுப் பகுதியை மட்டும் இவ்வாறு இணைத்துத் தைத்தால் லுங்கி தயார்.
லுங்கியின் ஓரத்தை அடித்த பின்னர், லுங்கியின் வெளிப்பக்கத்தை மீண்டு திருப்பி/பிரட்டி எடுத்து லுங்கியை அணியலாம். இவ்வாறு ஓரம் அடித்து தைத்த லுங்கியை சில பகுதிகளில் சாரம், கைலி என்பர்.
Keywords: கைலி மூட்டுவது எப்படி? சாரன் தைப்பது, சாரம் தைப்பது எப்படி? லுங்கி தையல் அடிப்பது எப்படி? லுங்கி ஓரம் அடிப்பது






Comments
Post a Comment