வியர்வை மற்றும் ஈரப்பதம் நீண்ட நேரம் உள்ளாடையில் இருந்தால், அரிப்பு, தடிப்பு அல்லது தோல் எரிச்சல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். எனவே, உள்ளாடையை நன்றாகத் துவைத்து, முழுமையாக உலர்ந்த பிறகே அணியுங்கள். வியர்வையால் ஈரமாகிவிட்டால், உடனே மாற்றுவது நல்லது. தொடர்ந்து அரிப்பு, தடிப்பு அல்லது எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
காலையில் எழுந்து குளித்த பின்னர், உடலை நன்கு துடைத்து உலர்த்திய பின்னர் அணியும் ஜட்டியை வேலை முடிந்து வீடு திரும்பியதும், இரவு கழட்டுவதில் தவறில்லை. ஆனால் காலையில் அணிந்த ஜட்டியுடன் ஜிம்மிற்கு சென்று ஜட்டி வியர்வையில் நனைய உடற்பயிற்சி செய்த பின்னர், ஜட்டியை மாற்றாமல் நாள் முழுக்க அந்த ஜட்டியுடனேயே இருப்பது ஆரோக்கியமானது அல்ல.
நீங்கள் தினமும் உள்ளாடை அணிபவராக இருந்தால், அதை ஒவ்வொரு நாளும் நன்றாகத் துவைத்து, முழுமையாக உலர்த்தி அணியுங்கள். இதனால் அதிகளவான வியர்வை மற்றும் அழுக்கு ஜட்டியில் தேங்காமல், சருமப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
உங்களுக்குத் தெரியுமா? சிலருக்கு புது ஜட்டியை டைட்டா போடறதை விட, எலாஸ்டிக் போய், ஓட்டை விழுந்த பழைய ஜட்டி தான் வசதியா,சௌகரியமா இருக்கும். ஆனால் ஆண்கள் ஜட்டி போடுவதே அது கொடுக்கும் சப்போர்ட்டிற்கு தான். அதுவே அங்கு கேள்விக் குறியாகும் போது அவ்வாறான பழைய ஜட்டிகளை அணிவது உகந்தது அல்ல.


Comments
Post a Comment