பொதுவாகவே ஆண்கள் வேட்டி அணியும் போது சட்டை போட மாட்டர்கள். வேட்டி அணியும் போது சட்டை அணியும் பழக்கம் பிற்காலத்தில் உருவானதாகும்.
முந்தைய காலங்களில் வேட்டி அணியும் ஆண்கள் வேட்டியுடன் வரும் சால்வையை போர்வை போல தோளைச் சுற்றி சுற்றிக் கொள்வர். அங்கவஸ்திரம் என்பது ஆண்கள் தோள்களில் போர்த்தி அணியும் ஒரு பாரம்பரிய மேலாடை ஆகும்.
ஆண்கள் சால்வையை போர்வையாக போர்த்திக் கொள்ளலாம். வேட்டி அணியும் போது சட்டை அணிந்தால், அதன் தோளில் ஒரு துண்டு போல மடித்தும் போட்டுக் கொள்ளலாம். சிலர் கழுத்தின் மேலாக, இரண்டு தோள்களில் இருக்கும் வண்ணமும் வேட்டியின் சால்வையை அணிவது உண்டு. விரும்பினால் வேட்டியின் சால்வையைப் பயன்படுத்தி தலைப்பாகை கட்டிக் கொள்ளலாம்.
வேட்டியின் சால்வையை அயன் செய்து, மடித்து அழக்காக, வேட்டியின் மேல், இடுப்புப் பகுதியில் ஒரு பட்டி போல இறுக்கிக் கட்டி உங்கள் அழகை மேலும் மேருகூட்டலாம்.
சாதாரண வேட்டியில் Pocket வசதி இருக்காது. ஆகவே Purse, Phone, Keys போன்றவற்றை சால்வையினுள் வைத்து உருட்டி, இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.
ஆண்கள் விரும்பினால் வேட்டியுடன் சேர்ந்து வரும் சால்வைக்குப் பதிலாக வித்தியாசமான நிறங்களில் உள்ள சால்வைகலையும் சால்வையாக பயன்படுத்தலாம்.
சில கோயில்கள் விசேட நிகழ்வுகளின் போது அணிய, உதாரணமாக கும்பாபிஷேடம், பிரத்தியேகமான சால்வைகளை விற்பனை செய்வதும் உண்டு.
Keywords: ஆண்கள் சால்வையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்


















Comments
Post a Comment