மைதுனம்(Sex) செய்து முடித்தவுடன் கணவன் மனைவி இருவருமே தண்ணீரைக் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் படுத்த(புணர்ச்சியில் ஈடுபட்ட) படுக்கையில் குழந்தைகளை படுக்க வைக்க கூடாது. அந்த சமயத்தில் உடலில் இருந்து வெளியேறிய வியர்வை நாற்றம் குழந்தைக்கு நோய் உண்டு பண்ணும்.
காண்டம் அணிந்து உடலுறவு கொண்டிருந்தால், ஆண்கள் காண்டத்தை முறையாக அகற்ற வேண்டும். உடலுறவு கொண்ட பின்னர் ஆண்கள் சிறுநீர் கழிக்க வேண்டும். உடலுறவின் போது அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள், மெத்தை விருப்பு, போர்வை போன்றவற்றை அலசிக் காய விட வேண்டும்.
கணவன் மனைவியாக இருந்தாலும் சுத்தப்படுத்துவது அவசியம், இல்லை என்றால் நோய் தாக்கும். சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும், வெளியே தகாத உறவினாலும் வெட்டை வியாதி என்ற நோய் உண்டாகும். பிறப்புறுப்புகளில் வலி எரிச்சல், அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறிக் கொண்டே இருப்பது. இதுதான் வெட்டை வியாதியின்(Gonorrhea) ஆரம்ப அறிகுறி. "வெட்டை வியாதி கட்டையுடன்" என்பர் கிராமங்களில். வெட்டை நோயாளிகள் புளி, காரம் தவிர்க்க வேண்டும்.
தகாத உறவினால் வெட்டை வியாதிப் பீடித்து வாழ்நாள் முழுவதும் பலவித நோய்கள் தோன்றி உடலை அழுக செய்யும். இதைதான் கிராமங்களில் "கோழி போனதுமில்லாமல் குரலும் போச்சு"என்பது போல தகாத உறவினால் பணத்தையும் செலவு செய்து உடலும் அழுகி உயிரின் ஆயுள் காலமும் குறைய தொடங்கும்.
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மைதுனம் முடித்த பின்பு(After Sex) பாலை கொஞ்சமாவது சுரந்து(முலைகளை பிதுக்கி) கீழே விட்டு விட வேண்டும். மைதுனம் முடித்து அப்படியே அந்த பாலை குழந்தைக்கு ஊட்டினால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும்.. அந்த குழந்தைகளுக்கு பேதி, காய்ச்சல், வலிப்பு போன்றவை ஏற்படும்.
சரியான உணவு ஆகாரம் இல்லாமல், தன் உடல் தகுதிக்கு மீறி(Sex Drive/Stamina) அளவுக்கு அதிகமாக அந்த நினைவிலே நேரம் செலவிட்டவர்(Masturbation) அல்லது பெண் சங்கமத்தில்(Sex with Woman) ஈடுபட்டவர்களுக்கு சிலருக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும். முட்டிக்கொண்டு வரும் பாத்ரூம் செல்வதற்குள் பெரும் அவதியாக இருக்கும். முருங்கைக்கீரை வதக்கும் போது அதில் இரண்டு மூன்று ஸ்பூன் எள்ளு, பிண்ணாக்கு கலந்து சமைத்து சாப்பிட்டு, இரவு தூங்கும் முன்பு கடுக்காய் தூள் அரை ஸ்பூன் சுடுநீரில் கலந்து சாப்பிட, முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கட்டுப்படும்.
பொதுவாக மாலை நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது. ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவாக மேலே சொன்ன முருங்கைக்கீரையை மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் போவது குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
மேகவெட்டை நோய் /Gonorrhea(கொனேரியா): பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றில் மேக வெட்டை நோய் அதாவது கோனோரியா நோயும் ஒன்று. இது பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. இதன் அறிகுறிகள் மோசமாக இருந்தால் குணப்படுத்துவது என்பது கடினம். கோனோரியா எந்த வயதினரையும், எந்த பாலினத்தவரையும் வேண்டுமானாலும் பாதிக்கலாம். குறிப்பாக 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளம் வயதினரை இது பாதிக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் அவை சில சமயங்களில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் தொற்று நோயை ஏற்படுத்தக் கூடியது.
மேகவெட்டை நோய் அல்லது கோனோரியா என்பது நெய்சீரியா கோனோரியா என்னும் பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு பால்வழி பரவும் நோய் ஆகும். இது பெரும்பாலும் வாய்வழி, குத அல்லது பிறப்புறுப்பு வழியாக உடலுறவு கொள்வதன் மூலம் பரவுகிறது. பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது ஆணுறை அல்லது பிற தடுப்பு முறையைப் பயன்படுத்துவது நல்லது. ஆண் பெண் இருவரையும் தாக்கும் இந்நோய் தாக்கம் பெண்களுக்கு கருப்பை அல்லது ஃபலோபியன் குழாய்களை அதிகளவு பாதிக்கிறது. இடுப்பு அழற்சி நோய்களைக் கூட உருவாக்கலாம். இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கிறது.
கோனோரியா தொற்று இருப்பவர்களுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. அப்படியே தெரிந்தாலும் அது குறைவாகவே இருக்கும். பொதுவான அறிகுறியாக சிறுநீர் கழிக்கும் போது மட்டும் அடிக்கடி எரியும் உணர்வு ஏற்படுகிறது. ஆண்களாக இருந்தால் அவர்கள் ஆண் உறுப்பில் இருந்து வெள்ளை, பச்சை அல்லது மஞ்சள் நிற திரவ வெளியேற்றம் ஏற்படலாம். சில நேரங்களில் கொனேரியா நோய் உள்ள ஆண்களில் விரைவீக்கம் அல்லது விரையில் வலி ஏற்படும். ஆண்குறியின் நுனித்தோலில் வீக்கம் ஏற்படலாம். பெண்களுக்கு இரத்த போக்கு ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி அரிப்பு ஏற்படலாம். புண் தோன்றலாம். இரத்தப் போக்கு ஏற்படலாம். குடல் இயக்கங்களில் வலி ஏற்படலாம். வாய்வழி உடலுறுவில் கோனோரியா இருந்தால் தொண்டையில் தொற்று ஏற்படலாம். கோனோரியா தொற்றால் ஒருவருக்கு கண் நோய் எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸை(Conjunctivitis) உண்டாக்கலாம்.
பிறப்புறுப்புகள், வாய், தொண்டை, கண்கள் மற்றும் மலக்குடல் உள்ளிட்ட உடலின் சளி சவ்வுகளில் ஏதேனும் தொற்று ஏற்படலாம். ஆண்குறி, புணர்புழை, ஆசனவாய் பாலியல் தொடர்பு மூலம் கோனோரியா ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. கோனோரியாவால் நாள்பட்ட இடுப்பு வலி தோன்றலாம். கருவுறாமை பிரச்சினைகள் ஏற்படலாம். எக்டோபிக் கர்ப்பம் ஏற்படலாம். புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவினால் மூட்டுத் தொற்று, பார்வை இழப்பு, உயிருக்கு ஆபத்தான இரத்த தொற்று போன்றவை ஏற்படலாம். ஆண்களுக்கு ஆண்குறியில் பாதிப்பை உண்டாக்கி கோனோரியா எபிடிடிமிட்டிஸுக்கு வழிவகுக்கும். இது கருவுறுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும். சிகிச்சை அளிக்கப்படாத கோனோரியா மூட்டுகளில் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இது தோல் அழற்சி, சொறி, அரிப்பு மற்றும் வறண்ட சருமத்தை ஏற்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் கோனோரியா தொற்று இருந்தால் மருத்துவரிடம் கண்டிப்பாக தொடர் சிகிச்சை மற்றும் ஆலோசனையில் இருக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தின் போது அது குழந்தைக்கும் தொற்ற வாய்ப்பு உள்ளது. அதனால் பிறந்த குழந்தைக்கு உடனடியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படலாம். இது பிறந்த குழந்தைக்கும் கான்ஜுன்க்டிவிடிஸ் உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. பொதுவாக பிறந்து 2-4 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு சிவப்பான கண்கள், கண்களில் தடித்த சீழ், வீங்கிய கண் இமைகள் போன்றவை இதன் அறிகுறியாக தோன்றலாம். பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் அறிகுறிகள் சரியாகாத அல்லது குறையாதபட்சத்தில் அவர்கள் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்கு அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே மீண்டும் உடலுறவு கொள்ள வேண்டும். தொற்று ஏற்படும் நிலை இருந்தால் பாலியல் செயல்பாடுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.
உடலுறவு மூலம் பரவுகின்ற நோயான வெட்டை நோய் (ஆங்கிலத்தில் கொணோரியா என்று அழைக்கப்படுகிறது), ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறக்கூடும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.










ReplyDeleteவிந்து கெட்டவன் நொந்து கெட்டான் என்று கூறுவதும் இதுதானோ?
உண்மை தான். ஆனால் நண்பா அது "விந்து விட்டவன் நொந்து கெட்டான்"
Delete